இன்று சனிக்கிழமை தான்! ஆனாலும் மழை வருமே! ‘இந்த’ மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்றும் தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தேனியில் விடுமுறை
இந்நிலையில் கனமழை காரணமாக இன்று(05.11.2022) ஒரு நாள் மட்டும் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. மீறி வகுப்புகள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வகுப்புகள்
அதே நேரத்தில் இன்று சனிக்கிழமை என்றாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலும் ஏற்கனவே விட்ட விடுமுறையை சரிசெய்ய சிறப்பு வகுப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் மழை
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இராஜபாளையம் பகுதியில் பரவலாக மழை பெய்த நிலையில் நேற்றும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இராஜபாளையம் நகர் , சமுசிகாபுரம் சத்திரப்பட்டி முறம்பு தளவாய்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு












Click it and Unblock the Notifications