கொளுத்தி எடுக்கும் வெயில்.. இன்று 6 மாவட்டங்களில் சதம் அடித்த சூரியன்! சேலத்தில் தான் டாப்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வெயில் 6 மாவட்டங்களில் சதம் அடித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப அளவை தாண்டியுள்ளது. இதனால் பகலில் வெளியே செல்லாமல் குழந்தைகளும், முதியோரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் மதிய வேளையில் வெளியே செல்லும் பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் கட்டடங்களுக்கு வெளியே வேலை பார்ப்பவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மதிய வேளையில் வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் அனேக இடங்களில் இன்று வெப்பநிலை அதிகமாக பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் இன்று பதிவாகியுள்ளது. அதேபோல ஈரோடு, வேலூர், கரூர், மதுரை, தருமபுரி உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 26 ஆம் தேதி முதல் ஒரு சில இடங்களில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்பு தெரிவித்திருந்தது. அதன்படி, 26-03-2025 முதல் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட படிப்படியாக 2- 3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என கூறியிருந்தது.
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் வெயில் 6 மாவட்டங்களில் சதம் அடித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. ஈரோடு, வேலூர், கரூர், மதுரை மாவட்டங்களில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் வறண்ட வானிலையை நீடிக்கும் எனவும், நாளை தென் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. எனினும், வட தமிழ்நாட்டில் நாளை வறண்ட வானிலையே நிலவும் என கணித்துள்ளது. நாளை மறுநாள் முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்ற ஆறுதல் செய்தியையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications