புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்!
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 14 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவிடம் உள்ள 14 தொகுதிகளில் அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவற்றிற்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்கிறது. இதை கடந்த மாதம் 14 ஆம் தேதி காரைக்காலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்தித்த பின் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். கடந்த தேர்தலில் 16 தொகுதிகளில் என்ஆர்.காங்கிரஸ் போட்டியிட்டது.

இந்நிலையில், என்ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 14 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவிடம் உள்ள 14 தொகுதிகளில் அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உடனான ஆலோசனைக்கு பின் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா பேட்டி அளித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications