இரண்டாவது வந்தே பாரத் ரயிலும் ஸ்லீப்பர் வசதியுடன் ரெடி.. இரவில் எப்போது ஓடப்போகிறது? பயணிகள் ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை குறைத்து, ஸ்லீப்பர் வசதியுள்ள வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க போவதாக ஐசிஎப் ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்தவகையில், ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் தயாராகிவிட்டது.. அதன் சோதனை ஓட்டமும் முடிந்து ஒப்புதலும் பெற்றாகிவிட்டது. எனினும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இப்படிப்பட்ட சூழலில் 2வது ஸ்லீப்பர் வந்தே பாரத் குறித்த தகவல் ஒன்று வெளியாகி, ரயில் பயணிகளின் கவனத்தை பெற்று வருகிறது.

வந்தே பாரத் ரயில்கள் துவங்கப்பட்ட நாளிலிருந்தே மக்களின் ஆதரவை அபரிமிதமாக பெற்று வந்தாலும், தொலை நேர பயணத்திற்கு ஏற்றவாறு மிருதுவாக இல்லாமல் கடினமாக இருப்பதாக பயணிகள் புகார்களை சொன்னார்கள்.

Vande Bharat Express Sleeper Train

எனவே, ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலிலும் தூங்கும் வசதிகொண்ட பெட்டிகளை, தலா 120 கோடி ரூபாயில் தயாரித்து இரவு நேரங்களில் இயக்க உள்ளதாகவும் ரயில்வே திட்டமிட்டது. இதற்காகவே 24 பெட்டிகள் கொண்ட 50 வந்தே பாரத் ரயில்களுக்கு, 1,200 பெட்டிகள் தயாரிக்கும் பணியும் ஆரம்பமானது.

பெங்களூருவில் பணி

பெங்களூரில் BEML நிறுவனத்தில், ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள் துவங்கப்பட்டது. இதில், 16 AC பெட்டிகளில் அதாவது, ஆரஞ்ச், மஞ்சள் நிறங்களில் பெட்டிகள் இருப்பதாகவும், முதல் வகுப்பு பெட்டியில், வெந்நீரில் குளிக்கும் வசதி, ஒவ்வொரு சீட்டிலும், எல்இடி மின் விளக்கு, செல்போன், லேப்டாப் சார்ஜிங் பாயின்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாம்.

AC பெட்டியில், மேல் படுக்கைக்கு செல்ல ஏணிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் சிறிய அளவிலான ஓட்டல், ஃப்ரிட்ஜ் வசதி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட 30 வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிபுணர்கள் குழு

இந்த ரயிலானது, சென்னை ஐசிஎப்-க்கு கொண்டு வரப்பட்டு, ரயில் பாதையில் இயக்கி, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, வல்லுனர்கள் குழுவினரின் நேரடி ஆய்வுகளும் நடத்தப்பட்டு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

இந்த ரயில் இதுவரை பயன்பாட்டுக்கு வராத நிலையில், ரயில்வே அதிகாரிகள் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. நீண்ட துாரம் செல்லும் தடத்தில், ஸ்லீப்பர் வசதி கொண்ட ஒரே ஒரு ரயில் மட்டுமே போதாது என்பதால், இன்னொரு ரயிலும் இருப்பது சிறப்பாக இருக்கும் என்று கருதினோம்.

அதனால் 2வது ரயில் தயாரிப்பு பணியும் நடந்து முடிய போகிறது.. இந்த பணிகள் அனைத்துமே முடிந்ததுமே 2 வந்தே பாரத் ரயில்களும் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
அக்டோபர் 15க்குள் பணிகள் முடிந்து, 2 வந்தே பாரத் ரயில்களும் அடுத்த மாதம் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ரயில்வே திட்டமிட்டுள்ளது" என்று உறுதி கூறியிருந்தார்.

மத்திய பிரதேசத்தில் இரண்டாவது ரயில்

இப்போது இரண்டாவது, ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயிலின் தயாரிப்பு பணி முடிந்து, அடுத்த கட்ட சோதனைக்காக, மத்திய பிரதேசத்துக்கு ஐசிஎப் அனுப்பி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, நீண்ட துாரம் செல்லும் தடத்தில், ஸ்லீப்பர் ரயில் ஒன்று மட்டுமே போதாது. இன்னொரு ரயிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என, ரயில்வே தெரிவித்தது. அதன்படி, இரண்டாவது ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள ரயில்வே வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, அடுத்த கட்ட சோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். இதற்கு பிறகு ராஜஸ்தானில், கோட்டா - லாபன் இடையே, மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கி சோதனை நடத்தப்படும். அதன்பிறகு இந்த 2 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் சேவையும் துவக்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+