சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை! தந்தை பரபரப்பு புகார்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி திவ்யா என்பவர் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி திவ்யா. இவர் டி.பி.சத்திரம் பகுதியில் தங்கி கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த மாணவி திருவள்ளூரை சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது. திருவள்ளூரில் இருந்து தினமும் கீழ்ப்பாக்கம் கல்லூரிக்கு சென்று வர முடியாததால் அவர் டி.பி. சத்திரம் பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது.
பணிச்சுமை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய தந்தை குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications