தூண்டிலில் "தலை".. பன்னீருக்கு பல்ஸ் எகிறுதாமே.. எகிறியடிக்கும் பாஜக.. கதிகலங்கும் கடலூர் திமுக..!
கடலூர் பாஜக கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்ள காரணம் என்ன தெரியுமா
சென்னை: இன்றைய தினம் கடலூர் பாஜக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அண்ணாமலை கலந்து கொள்கிறார்.. இதற்கு ஒரு ஸ்பெஷல் காரணம் உள்ளதாம்.
இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்தது.. திமுக ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வரும்போதெல்லாம், இந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளும் என்றும், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே திமுக இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார்.

ஸ்பெஷல்ஸ்
இதனிடையே, நம் ஒன் இந்தியா தமிழுக்கு அக்கட்சியின் சீனியரும், மாநில துணை தலைவருமான நாராயணன் திருப்பதி ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அந்த பேட்டியில், அவர் சொல்லும்போது, "மத்திய பல்கலைக்கழகங்கள், கேந்திரி வித்யாலயா பள்ளிகள், இங்கெல்லாம் தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று நாம் சொல்லும்போது, இங்கே அதை எதிர்க்கிறார்கள்.. ஏன் எதிர்க்கிறார்கள்? தமிழ் மேல இவங்களுக்கு என்ன கோபம்? கடிதப்போக்குவரத்து போன்ற தகவல் பரிமாற்றங்கள் எல்லாம் தமிழில் இருக்க வேண்டும் என்று சொன்னால், அதையும் முடியாது என்று சொல்கிறார்கள்.. ஏன் எதிர்க்கிறார்கள்?

டிரான்ஸ்போர்ட்
எல்லா இடங்களிலும் தென்னிந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் என்று தேசிய கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தால், அதையும் இவர்கள் எதிர்க்கிறார்கள்.. இப்படி எல்லாத்திலும் ஒருவருடமாகவே, தமிழை புறந்தள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறது திமுக.. 30 வருடங்களாகவே, திமுக நடத்துகிற, அதிலும் முதல்வர் குடும்பம் நடத்துகிற பள்ளிகளில் தமிழே கிடையாது.. அதாவது தனியார் பள்ளிகள் தமிழை புறந்தள்ளிவிட்டு, ஆங்கிலத்தை முன்னெடுத்து செல்கிறார்கள்.. தமிழக அரசு, தங்களின் வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.. அதனால்தான் தமிழை ஒதுக்கி கொண்டிருக்கிறார்கள்" என்று விளக்கம் தந்திருந்தார்.

நாராயணா
அந்த வகையில், இன்றைய தினம் திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தை பாஜக முன்னெடுத்துள்ளது.. இந்த போராட்டம் குறித்து 2 விதமான தகவல்கள் கசிந்து வருகிறது.. தமிழகம் முழுவதும் நடந்து வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கடலூரில் கலந்து கொள்கிறார் அண்ணாமலை. இதற்கு ஒரு ஸ்பெஷல் காரணமும் உள்ளதாம்.. அதாவது அன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வார்னிங் தந்திருந்தார் இல்லையா? இதற்கு கடலூர் மாவட்டத்தின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "அண்ணாமலை கரூரை விட்டுத் தாண்ட முடியாது" என்று கெத்தாக பதிலடி தந்திருந்தார்.. அதற்காகவே, கடலூரில் கால் வைக்கிறாராம் அண்ணாமலை.. "உன் ஏரியாவுக்கே வந்துட்டேன் பாரு" என்பதற்கான சிக்னல்தானாம் இது..

தூண்டில்
அதனாலேயே கடலூர் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்க அண்ணாமலை முடிவெடுத்தார் என்கிறார்கள்.. அந்தவகையில், பன்னீர் செல்வத்துக்கு சிக்கலை உண்டாக்கும் குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைக்கக்கூடும் என்றும் தெரிகிறது.. இதை அடிப்படையாகவே வைத்தே, எம்ஆர்கே பன்னீர் தரப்பின் ஆதரவாளர்களுக்கும் வலையை வீசிவைத்துள்ளார்களாம்.. இன்றைய தினம், அவர்கள் காவித்துண்டுடன் பாஜகவில் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. வாயை கொடுத்து, எம்ஆர்கே சிக்கி கொண்டதுடன், தேவையில்லாத தலைவலியையும் இழுத்து வைத்து கொண்டாரே என்று புலம்புகிறது கடலூர் திமுக..












Click it and Unblock the Notifications