சென்னையில் இன்று விநாயகர் ஊர்வலம்.. போக்குவரத்து மாற்றம் - 16,500 போலீசார் குவிப்பு
சென்னை: சென்னையில் இன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது. 17 வழித்தடங்கள் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைக்கப்பட உள்ள நிலையில் 16,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 7 ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தினர். அதேபோல் கோவில்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.

சென்னையிலும் பல இடங்களில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து ஒரு வாரமாக பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் தான் இன்று சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. பல இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளது.
அதன்படி விநாயகர் சிலைகள் இன்று காலை 10 மணி முதல் ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் என 4 கடற்கரை பகுதிகளில் சிலைகள் கரைக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி சென்னையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி முடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் 16,500 காவலர்கள் மற்றும் 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதவிர விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி சென்னையில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருவல்லிக்கேணியிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் மெதுவாக சென்று, காந்தி சிலையிலிருந்து வலதுபுறமாக ஆர்.கே. சாலை வி.எம் தெரு - இடது சந்திப்பு - அமிர்தஜன் சந்திப்பு - டிசெல்வா சாலை வாரன் சாலை - வலது - டாக்டர்.ரங்கா சாலை பீமனா கார்டன் சந்திப்பு - இடது திருப்பம் - சிபி ராமசாமி சாலை செயின்ட் மேரிஸ் சந்திப்பு - காளியப்பா சந்திப்பு -இடதுபுறம் ஸ்ரீநிவாசா அவென்யூ ஆர்.கே.மட் சாலை வழியாக செல்ல வேண்டும்.
சாந்தோம் சாலை வழியாக வெளிச்செல்லும் வாகனங்கள், காந்தி சிலையிலிருந்து வலதுபுறம் ஆர்.கே. சாலை வி.எம். தெரு இடது - Luz சந்திப்பு - அமிர்தஜன் சந்திப்பு - டி செல்வா சாலை வாரன் சாலை வலது டாக்டர்.ரங்கா சாலை - பீமனா கார்டன் சந்திப்பு இடது திருப்பம் - சிபி ராமசாமி சாலை - செயின்ட் மேரிஸ் சந்திப்பு - காளியப்பா சந்திப்பு இடதுபுறம் ஸ்ரீநிவாசா அவென்யூ ஆர்.கே. மட் சாலை வழியாக செல்ல வேண்டும்.
ஊர்வலம் ரத்னா கஃபே சந்திப்புக்கு அருகில் வரும்போது, ஜாம் பஜார் பிஎஸ்ஸில் இருந்து எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. ரத்னா கஃபே சந்திப்புக்கு பதிலாக இந்த வாகனங்கள் ஜானி ஜான் கான் சாலையை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம். விநாயகர் ஊர்வலம் டி.எச்.ரோடுக்குள் நுழையும் போது, ஐஸ் ஹவுஸ் சந்திப்பில் இருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக இந்த வாகனங்கள் பெசன்ட் சாலை காமராஜர் சாலை வழியாக திருப்பி விடப்படும் அல்லது இடதுபுறம் ஜிஆர்எச் சந்திப்பை நோக்கி சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
மேலும் மந்தைவெளியில் இருந்து சாந்தோம் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தேவைப்பட்டால் தேவநாதன் தெரு ஆர்.கே. மட் சாலை வழியாக திருப்பி விடப்பட உள்ளது. லைட் ஹைவுஸ் முதல் சீனிவாசபுரம் உள்ள லூப் ரோட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு செல்லும் வாகனம் மட்டும் அனுமதிக்கப்படும். விநாயகர் சிலையினை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை" என கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications