விஜயலட்சுமிக்கு கருக்கலைப்பு செய்தபோது போட்ட கையெழுத்து யாருடையது? யார் அந்த டாக்டர்.. தீவிர விசாரணை
சென்னை: விஜயலட்சுமிக்கு கருக்கலைப்பு செய்தபோது போட்ட கையெழுத்து யாருடையது? கருக்கலைப்பு செய்த டாக்டர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரின் பேரில் நடிகை விஜயலட்சுமிக்கு சுமார் 2 மணி நேரம் மருத்துவ பரிசோதனை சென்னை கீழ்பாக்கம் அரசு மருதுவமனையில் நேற்று நடந்தது.
சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தன்னை சீமான் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சரியான 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீமான் மீது விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி சென்னை, ராமாபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த விஜயலட்சுமி, சீமான் மீது கொடுத்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 1-ம் தேதி திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜராகி தனது வாக்கு மூலத்தை அளித்தார். அப்போது வழக்கு சம்பந்தமான ஆவணங்கள், புகைப்படங்களையும் விஜயலட்சுமி சமர்பித்ததாக கூறப்படுகிறது.
விஜயலட்சுமி, சீமான் தன்னிடம் பணம், நகையை பறித்து மோசடி செய்ததாகவும், மேலும் 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தீவிரமான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
இதன் அடிப்படையிலேயே சீமானுக்கு எதிரான விசாரணையில் போலீசார் தீவிரமான விசாரணையில் இறங்கினர். மேலும கருக்கலைப்பு செய்ததாக கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு கன்னித்தன்மை பரிசோதணை நடத்தவும்,. மருத்துவ ரீதியான ஆதாரங்களை உறுதிபடுத்தவும் போலீசார் முடிவு செய்தனர்.,
இதன்படியே சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு விஜயலட்சுமியை நேற்று காலை 10 மணிக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு கர்ப்பிணிகள் பரிசோதனை செய்யும் வார்டுக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 2 மணி நேரம் 4 பேர் கொண்ட மகப்பேறு மருத்துவர்கள் நடிகை விஜயலட்சுமிக்கு கருப்பையில் 'அல்ட்ராசவுண்ட்' என்ற மருத்துவ பரிசோதனையை செய்தனர், பரிசோதனை முடிந்து மதியம் 12.30 மணியளவில் வார்டிலிருந்து வெளியே வந்தார். அவரை போலீசார் பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தார்கள்.
மருத்துவ பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் தான் சீமான் மீதான விஜயலட்சுமி புகார் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டனர். இதனிடையே நடிகை விஜயலட்சுமிக்கு கருக்கலைப்பு செய்தது எந்த டாக்டர் என்பதை கண்டறிந்து அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள போலீசார், அதேபோல், விஜயலட்சுமி கருக்கலைப்புக்கு கையெழுத்து போட்டது யார்? என்று விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனை அறிக்கை, கருக்கலைப்பு செய்த டாக்டர், கருக்கலைப்புக்கு கையெழுத்து போட்டது யார் ஆகிய விவரங்கள் வெளியே வந்தால், சீமான் மீதான புகாரில் அடுத்த கட்ட நடவடிக்கையை போலீசார் எடுப்பார்கள் என கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications