தாலிக்கு தங்கமும் சாதனைதான்.. டாஸ்மாக்கால் பெண்கள் தாலியை இழக்க வச்சதும் சாதனைதான்- சீமான்
சென்னை: தமிழகத்தில் தாலிக்குத் தங்கம் கொடுத்தது சாதனை என்றால் மக்களை குடிக்க வைத்து 2 லட்சம் பெண்கள் தாலியை இழக்க வைத்தது தமிழக அரசின் சாதனைதான் என பனப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருந்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிறது. 117 ஆண், 117 பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார் சீமான். தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் சோளிங்கர் சட்டசபைத் தொகுதி வேட்பாளர் பாவேந்தரை ஆதரித்து பனப்பாக்கம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார் சீமான்.

கடவுள்
அப்போது திறந்த வேனிலிருந்து ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில் தமிழகத்தில் விவசாய வேலை அரசு வேலையாக அறிவிக்கப்படும். இந்துக்களின் கடவுளான கிருஷ்ணர், இஸ்லாமியர்களின் கடவுளான நபிகள் நாயகம், கிறிஸ்துவர்களின் கடவுளான இயேசுபிரான் என அனைவரும் ஆடுமாடுகள் மேய்த்தவர்கள்தான்.

25 ஆயிரம் கோடி
அப்போது ஏன் நீங்கள் எல்லாம் ஆடு, மாடு மேய்க்கக் கூடாது. ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு வருகிறது. தமிழகத்தில் மாடுகள் மூலமாக பால் விற்பனையில் 3 லட்சம் கோடி வருவாய் இருக்கும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்து வைத்து ஆண்டு ஒன்றுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்கிறது.

டாஸ்மாக் கடைகள்
ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நூலகம் இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு தெருவுக்கும் 2 டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்துள்ளது. தமிழகத்தில் தாலிக்கு தங்கம் கொடுப்பது சாதனை என்றாலும் டாஸ்மாக் கடை மூலம் 2 லட்சம் பெண்களின் தாலியை இழக்க செய்ததும் தமிழக அரசின் சாதனைதான் என சரமாரியாக குற்றம்சாட்டினார் சீமான்.

சீமான் போட்டி
நீட் தேர்வு, மீத்தேன் திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம், 8 வழிச்சாலை திட்டம் உள்ளிட்ட மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து சீமான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தற்போது நடைபெறும் தேர்தலில் அவர் திருவொற்றியூர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications