சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீமானை கைது செய்தே ஆகணும்..வீடியோவுடன் திமுக அரசை நெருக்கும் காங்கிரஸ்.. டிஜிபியை சந்திக்கும் டீம்

Google Oneindia Tamil News

சென்னை : சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, திமுக அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் கு. செல்வப்பெருந்தகை மற்றும் ஜோதி மணி எம்பி ஆகியோர் தமிழக டிஜிபியை சந்தித்து முறையிட உள்ளார்கள்.

சீமான் உள்பட நாம் தமிழர் கட்சி முன்னணி நிர்வாகிகள் அண்மைக்காலமாக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிள்ளைகள் என்று கூறி பேசியதுடன், காங்கிரஸ் கட்சியினரை சீண்டும் வகையில் பேசி வருகிறார்கள். இதனால் கடும் கோபத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசும் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி வலியுறுத்தினார்.

ஆர்சிபிக்கு எதிராக 3 தப்பான முடிவுகள்.. கோபமடைந்த கோலி.. அம்பயரிடம் சென்று ஆவேச வாக்கு வாதம் ஆர்சிபிக்கு எதிராக 3 தப்பான முடிவுகள்.. கோபமடைந்த கோலி.. அம்பயரிடம் சென்று ஆவேச வாக்கு வாதம்

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

இது தொடர்பாக டிஜிபியை சந்தித்து மனுவும் அளித்தார். அப்போது பேசிய கேஎஸ் அழகிரி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலங்களாக காங்கிரஸ் கட்சியை ஏற்கத்தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகிறார். விமர்சிக்க கூடாது எனக் கூறவில்லை, அதற்குரிய வார்த்தை வரம்புகள் இருக்கின்றன. சீமானின் கொள்கைகள் எடுபடாத நிலையில், இதுபோன்ற விமர்சனங்களை செய்து வருகிறார்.''

7 நாள் கெடு

7 நாள் கெடு

அரசியல் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் அவர் வன்முறை பேசுவதால் விளம்பரம் தேடிக் கொள்கிறார். சென்னையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் இது குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் புகார் மீது 7 தினங்களில் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது முழுக்க முழுக்க கட்சி சார்ந்த புகாரே தவிர தனிப்பட்ட புகார் இல்லை.'' என்று கூறியிருந்தார்.

சர்ச்சை பேச்சு

சர்ச்சை பேச்சு

இந்த சூழலில் இரண்டு நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன், சீமான் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினரை மோசமாக எச்சரித்தார். அவர் திமுகவினரை பற்றி கூறும் போது, நீங்கள் கருணாநிதி, அண்ணாதுரையிடம் படித்து வளர்ந்தவர், நாங்கள் தலைவர் பிரபாகரனை படித்து வளர்ந்த பிள்ளைகள். பெரியார், கருணாநிதி பிள்ளைகளுக்கு பேச தெரியும், எழுத தெரியும். பிரபாகரன் பிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்று காங்கிரஸ்காரர்களுக்கு தெரியும். ராகுல் காந்திக்கு தெரியும். சோனியா காந்திக்கு தெரியும். உங்களுக்கு தெரியும்ல, உங்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் ஞாபகம் இருக்கும்ல, அவ்வளவு தான் என்று ஆள் காட்டி விரலை நீட்டி எச்சரித்தபடி சாட்டை துரைமுருகன் பேசினார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Recommended Video

    ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க - வேல்முருகன் அறிவுரை
    பயங்கரவாத தடை சட்டம்

    பயங்கரவாத தடை சட்டம்

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி ஜோதிமணி முதல்வர் ஸ்டாலினுக்கு ட்விட்டரில் சாட்டை முருகனின் வீடியோவை பதிவு செய்து, நடவடிக்கை தேவை என குரல் எழுப்பி இருந்தார். அந்த பதிவில், நாம் தமிழரின் இந்த பேச்சு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் வரக்கூடிய குற்றம்.தமிழகத்தின் அமைதியும்,அப்பாவி இளைஞர்களின் எதிர்காலமும் நாசமாகிவிடும்.தமிழ்நாட்டின் அமைதியான எதிர்காலத்தில் ஒருதுளிகூட சமரசம் செய்துகொள்ளக்கூடாது.தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எ

    ஜோதிமணி கோரிக்கை

    ஜோதிமணி கோரிக்கை

    மேலும் சீமான் இந்த மேடையில் இருந்திருக்கிறார். அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே இந்த பயங்கரவாத பேச்சு நடந்திருக்க முடியும். ஆகவே சீமானையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இதற்குமுன்பு இதே சட்டத்தின்கீழ் இப்படி கைது நடந்திருக்கிறது என்று ஜோதிமணி தனது பதிவில் கூறியுள்ளார்.

    வடசென்னை காங்கிரஸ்

    வடசென்னை காங்கிரஸ்

    காங்கிரஸ்காரர்களை ஆபாசமாக விமர்சிக்கும் சீமானின் நாக்கை அறுத்துவிடுவேன் என வட சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரவியம் கடுமையாக எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனிடையே சாட்டைதுரைமுருகன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சீமானையும் கண்டிப்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் சீமான் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

    டிஜிபியை சந்திக்கும் குழு

    டிஜிபியை சந்திக்கும் குழு

    காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் .கு. செல்வப்பெருந்தகையும் இன்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபுவை நேரில் நாம் தமிழர் கட்சியின் தலைவ சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்( UAPA) கீழ் கைதுசெய்ய வேண்டும் என்று புகார் அளிக்க உள்ளார்கள். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

    English summary
    The Congress party has been putting the DMK government in dire straits, demanding that Seeman be arrested under the National Security Act. In this situation, at 10 this morning, the leader of the assembly committee of the Congress party, Ku. Selvaperunthakai and JothiMani MP are going to meet the Tamil Nadu DGP and appeal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X