திருச்சி விமான நிலைய மோதல் நினைவிருக்கா? மதிமுகவுடன் சமரசமான நாம் தமிழர்.. சீமான் விடுதலை
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்கள் - நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் வழக்கிலிருந்து சீமான் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு வரவேற்பு அளிப்பதற்காக திருச்சி விமான நிலையத்தில் அக்கட்சியினர் திரளாக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் திருச்சி விமான நிலையம் வருவதால் அவரை வரவேற்பதற்காக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அங்கு நின்று கொண்டிருந்தனர்.
அருகருகே நின்ற இரு கட்சி தொண்டர்களும் தங்கள் தலைவர்களை வரவேற்பதில் போட்டி போட்டபோது அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் 6 வது குற்றவியல் நீதிமன்றத்தில் பல கட்டங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம் சீமானை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இரு தரப்பினரும் சமரச உடன்பாட்டுக்கு வந்ததை தொடர்ந்து வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி சிவக்குமார் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications