Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 தேவதூதர் திமுகவில்.. முஸ்லிமுக்கு நான் எதிரி, ரைட்டு விடு.. சின்னகவுண்டர்ல இல்லாத வன்முறை?: சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்ன கவுண்டர்னாலே வராத கலவரமா, மாமன்னனால் வந்துவிட்டது? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

மணிப்பூரில் நடந்த கலவரத்தை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சென்னையில் சில தினங்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தது. அப்போது சீமான் பேசியபோது, "முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள்" என்று கூறவும், மிகப்பெரிய சர்ச்சை கிளம்பியது.

Seeman says about Maamannan, Chinna gounder and slams DMK, Congress, BJP, AIADMK parties

திமுகவுக்கான சிறுபான்மையினர் வாக்கு வங்கியை குறி வைத்தும், தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவு தருவதை மையப்படுத்தியும் சீமான் இவ்வாறு பேசியிருந்தாலும், கடுமையான கொந்தளிப்பை சிறுபான்மையினர் சமூகத்திடையே எழுப்பியிருந்தது.

செருப்பால் அடிப்பேன்: இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சீமான், "முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர்கள் கிடையாது.. ஆனால், அவர்களை இனிமேலும் யாராவது சிறுபான்மையினர் என்று சொன்னால், செருப்பால் அடிப்பேன்" என்று பேசி மறுபடியும் பரபரப்பை கிளப்பினார்.

ஏற்கனவே சீமானை பாஜகவின் B டீம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும்நிலையில், சீமானின் இந்த பேச்சு பாஜகவுக்கான ஆதரவாளராகவே சோஷியல் மீடியாவில் அடையாளப்படுத்தியது.. இப்படிப்பட்ட சூழலில், சீமான் ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.

சின்னகவுண்டர்: அந்த பேட்டியில், தான் ஏன் சாத்தானின் பிள்ளைகள் என்று சொன்னேன்? என்பதற்கு விளக்கம் தந்துள்ளார். அத்துடன், மாமன்னன் போன்ற படங்கள்தான் நாங்குநேரி சம்பவம் நடக்க காரணமாகிறதா? என்ற கேள்விக்கும் சீமான் பதிலளித்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

"நேரடி சாதி பெருமை பேசிய படங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன.. இந்த மாமன்னன் படத்தில், தங்களுடைய காயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.. அவ்வளவுதான்.. காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும், ஒரு நாள் முதல்வர் போல, ஒருநாள்
பறையராக வாழ்வது எவ்வளவு சிரமம் தெரியுமா இந்த வலியைத்தான், மாமன்னன் திரைமொழியில் மொழிபெயர்த்து சொல்லியிருக்கிறார்கள்.

மாமன்னன்: சின்னக்கவுண்டர்ல வராத கலவரமா மாமன்னனில் வந்துவிட்டது? தேவர் மகனையும் இப்படித்தான் சொன்னாங்க.. எத்தனை பேர் அதில் வெட்டி குத்துபட்டு செத்தாங்க? இத்தனைக்கும் வன்முறைக்கு எதிராகத்தான் அந்த படம் இருந்தது.. ஒருபடம் எடுத்ததாலே, வன்முறை புகுந்துவிட்டது என்றால், 10 படங்களை மதுவுக்கு எதிராக எடுத்தால், மது குடிக்காமல் எல்லாரும் திருந்திவிடுவார்களா? சாதிக்கு எதிராக எத்தனையோ படங்கள் வந்திருக்கே? அரிவாளை கீழே போட்டுட்டு எல்லாரும் போயிட்டாங்களா?

சிறுபான்மையினர் சாத்தானின் பிள்ளைகளாக மாறி ரொம்ப நாளாகிவிட்டது என்று ஆதங்கத்தில் சொன்னேன்.. இந்த நாடு நாசமா போனதுக்கு காரணமே, பாஜக, திமுக அதிமுக, காங்கிரஸ்.. இவர்கள்தான் முக்கிய காரணம். அரைநூற்றாண்டு காலம் ஆண்ட காங்கிரஸ்தான், எல்லா அடிப்படை குறைகளுக்கும் காரணம்..

காங்கிரஸ் கட்சி: பாஜகவை வரவழைத்தது யார்? 10 ஆண்டு காலம் மன்மோகன் ஆட்சி நடக்கும்போது, பாஜகவை வரவழைத்தது யார்? காங்கிரஸதான் காரணம்.. காங்கிரஸ்செய்த ஊழலால் மக்கள் கொந்தளித்து விட்டடார்கள். 10 ஆண்டு காலம் காங்கிரஸ் சரியாக இருந்திருந்தால், பாஜகவின் தேவையே இல்லாமல், அந்த கட்சி அப்பவே செத்திருக்குமே.. சாத்தானின் குழந்தைகளாக மாறிட்டீங்களேன்னு இதுக்குதான் ஆதங்கமாக கேட்டேன்.

திமுக, காங்கிரஸ் 2 பேரும், கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களுக்கு செய்த ஏதாவது ஒரு நன்மையை சொல்லுங்கன்னு கேட்டேன். ஆனால், சிறுபான்மையினர் என்று சொன்னதுக்கே கொந்தளிக்கிறீங்களே? என்னுடைய வாக்குரிமை சீட்டில் நான் இந்திய நாட்டின் குடிமகனாக வாழுகிறேன். அவ்வளவுதான்..

வாய்ப்பு இருக்கா?: கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களாக எத்தனை பிரதமர்கள் இதுவரை இங்கே வந்திருக்கிறார்கள்? இனி யாருக்காவது வாய்ப்பு தர வாய்ப்பு இருக்கா? எதுக்கு அப்பறம் சிறுபான்மையினர் என்று சொல்றே? என்றெல்லாம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார் சீமான்.

Seeman says about Maamannan, Chinna gounder and slams DMK, Congress, BJP, AIADMK parties

இதனிடையே, சீமான் பேசிய இன்னொரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் சீமான், "இஸ்லாமிய பெருமக்களே.. சீமான் உங்களுக்கு எதிரி... அவ்வளவுதானே. ஆமா எதிரி தான். என்னை விட்டுருங்க... ஏதோ என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். உங்களால் முடிந்ததை நீங்க செய்யுங்கள். ஸ்டாலின் ஐயாவையும், அவரது மகன் உதயநிதியையும் தயவுசெய்து தொடர்ச்சியாக பதவியில் இருக்குமாறு பார்த்துக்கோங்க.. ஏன்னா, அதுதான் உங்களின் பிறவிக்கடமை.

இறைவன் உங்களின் இறுதிநாளில் கேட்பார். "நான் தேவ தூதர்கள் 2 பேரை (ஸ்டாலின், உதயநிதி) அனுப்பி வைத்தேனே. அவர்களை நீ ஏன் கைவிட்டாய்? அவர்களுக்கு வாக்கு செலுத்தாமல் ஏன் வஞ்சித்துவிட்டாய்?" என இறைவனே உங்களை கேட்பார்.

"நீ ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டாயா? அப்படின்னா வா நேராக சொர்க்கத்துக்கு போ... சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதிக்கு ஓட்டு போட்டவனா நீ? சரி, நீயும் சொர்க்கத்துக்கு போ" என்று இறைவன் சொல்வார்.

அல்லா: ஸ்டாலின், உதயநிதிக்கு போடாமல், சீமானுக்கு ஓட்டு போட்டவர்களை ஹராம் (பாவம்) என்று சொல்லி நேராக நரகத்தில் தள்ளிவிடுவார்... போங்கய்யா.. உங்களை எல்லாம் வெச்சுக்கிட்டு.. அதாவது, ஒரே ஒரு பிழை நிகழ்ந்திருச்சு... நான் உங்க கூட பிறந்தது.. இல்லைனா நீ என் கூட பிறந்தது. ஏதோ ஒரு பிழை நிகழ்ந்திருச்சு. போகட்டும். எல்லாத்தையும் அல்லா கையிலேயே ஒப்படைப்போம் என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+