கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்!
வேலூர்: கலைஞரின் மகள் கனிமொழிக்கு சீட்டு தராதவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு தர போகிறார்கள், கனிமொழி மாநில அரசியலுக்கு வந்தால் உதயநிதிக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அவர்களை வரவிட மாட்டார்கள். அந்த குடும்பத்து பெண் என அவர்கள் நினைக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுகவை விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சோனியா, காட்பாடியில் போட்டியிடும் திருக்குமரன் அணைக்கட்டில் போட்டியிடும் ரவிக்குமார் ஆகிய மூன்று வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் மண்டி தெருவில் வேன் மூலம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்," கலைஞரின் மகள் கனிமொழிக்கே சீட்டு தராதவர்கள் கம்யூனிஸ்ட்க்கு எப்படி தருவார்கள். அவர்கள் ஒரு ஆளுமை உள்ள பெண் அவர்கள் மாநில அரசியலுக்கு வரும்போது உதயநிதிக்கு இடையூறாக இருப்பார்கள் என்பதால் அவர்களை இங்கே வர விட மாட்டார்கள்.

கனிமொழி சீட்
என்னதான் இருந்தாலும் அவர்களுடன் பிறந்தவர்கள் அவர்கள். அந்த குடும்பப் பெண் இல்லை என நினைப்பார்கள். ராமதாஸ் தனித்துவிடப்பட்டதால் தான் சசிகவுடன் கூட்டணி வைத்துள்ளார் என கேட்டதற்கு, அவர் எப்படி தனித்து விடப்பட்டார் என நீங்கள் கூறலாம்.
சீமான் பேச்சு
அவர் கட்சிகளால் தான் தனித்து விடப்பட்டரே தவிர மக்களால் அல்ல. என்றைக்கும் மக்கள் அவர் பின்னால் இருக்கிறார்கள், மக்களுக்காக அவர் இருக்கிறார். அவருடைய ஒரு மகன் போனால் என்ன மற்றொரு மகன் நான் இருக்கிறேன். அவரைப் பார்த்து தான் இந்த பேச்சையும் போராட்ட குணத்தையும், உணர்வையும் நான் கற்றுக் கொண்டேன். சமூக நீதிக்காக பெரியார் என்ன செய்து விட்டார் இன்றும் செய்து கொண்டிருப்பவர் அய்யா ராமதாஸ்.
ராமதாஸ்
அவருடைய கனவை நான் நிறைவேற்றுவேன் அதற்காக தானே நான் அரசியலில் இருக்கிறேன். மொத்த கட்சி கூட்டணியை ஒத்த கட்சி மோதி வெல்லும் மொத்தத்தில் வீரம் வேண்டும் சுடலை மாடா. கொரோனாவைப் போல மற்றொரு பேரிடரை சந்திக்க தயாராக வேண்டும் என மோடி கூறியிருந்தது குறித்து கேட்டதற்கு, அவர்கள் தான் தட்டுப்பாடையை கொண்டு வரப் போகிறார்கள், இதுக்காகத்தான் தற்சார்பு பொருளாதாரத்தை கொண்டு வர வேண்டும் என நான் கூறுகிறேன்.
எரிவாயு தட்டுப்பாடு
எங்கோ குண்டு போட்டால் நமக்கான எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுகிறது அதற்கு என்ன காரணம். பெட்ரோல், டீசல் இல்லாமல் போனால் வண்டியை எல்லாம் துடைத்து வைத்து விட வேண்டியது தான். நானே சைக்கிளில் போய் ஓட்டு கேட்கலாம் என்று தான் இருக்கிறேன். ஊழல் லஞ்சம் இல்லாத நிர்வாகம் இந்த நாட்டில் இல்லை. ஊழல் லஞ்சமற்ற ஒரு நிர்வாகத்தை உருவாக்கிடவே நாம் தமிழர் கட்சி முன்னிருக்கிறது. இலவசங்களை வாரி வாரி கொடுத்து ஏமாற்றுவதில்லையே குறியாக இருக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி
மாறுதல் ஒன்றுதான் நமக்கு ஆறுதலை தரும். அதற்கான தேர்தல் தான் இது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் வந்திருப்பது ஆள் மற்றம் ஆட்சி மாற்றத்திற்கு அல்ல ஆட்சி முறை மாற்றத்திற்கு. கால்நடைத்துறை, பால்வளத் துறை அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனால் கால்நடையும், பாலும் இல்லை. தமிழ்நாட்டிற்கே ஆந்திராவில் இருந்து தான் வருகிறது. நான் கூட்டணிக்கு வந்தால் பணமும், துணை முதல்வரும் தருகிறேன் என்கிறார்கள். ஆனாலும் நாங்கள் போகவில்லை. நல்ல ஆட்சியை தர, ஊழலை ஒழிக்க மக்களுக்காக நிற்பவர்கள் நாங்கள்" என்று சீமான் பேசினார்.
-
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
Khushbu Sundar: தவெகவுக்கு 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்களா? குஷ்பு தடாலடி கேள்வி! -
Election Exclusive: விஜய் + சசிகலா + ராமதாஸ்? தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் 3வது கூட்டணி? கணக்கு சரியா வருமா? -
கட்சிக்காரங்கள விட்ருங்க..கல்யாண வீட்டுக்காரங்கள புடிங்க! தேர்தல் சீசனில் முகூர்த்தம்! பாவம் மக்கள்! -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
சாப தொகுதி காங்கேயம்.. தோல்வி பீதியில் அமைச்சர்? ஜெயலலிதாவே எம்எல்ஏ பதவியை தூக்கியெறிந்த இடமாச்சே














Click it and Unblock the Notifications