செத்துப்போன குடும்பத்தை பனையூருக்கு வர சொல்கிறார்.. பண்ணையார் கூட பஞ்சாயத்துக்கு வருவார் ஆனால்.. விஜயை விளாசிய சீமான்
சென்னை: ‛‛செத்துப்போன குடும்பத்தினர் அனைவரையும் பனையூருக்கு வா என்று சொல்கிறார். அப்படி என்றால் தேர்தல் நேரத்தில் அனைத்து ஓட்டு பெட்டிகளையும் பனையூரில் வை என்று சொல்வாரா? என்னங்க இது.. பண்ணையார் கூட பஞ்சாயத்துக்கு வருவார். ஆனால் பனையூர் பஞ்சாயத்து என் வீட்டில் தான்.. ஆலமரத்துக்கு வரமாட்டேனு இருக்கிறார். வீட்டில் தான் பஞ்சாயத்து.. என்னடா என்றால் நாட்டாமையை தாண்டிய நாட்டாமையாக இருக்கிறது'' என தவெக தலைவர் விஜயை, கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கடந்த மாதம் 27 ம் தேதி கரூர் வேலுச்சாமி புரத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இருப்பினும் விஜய் கரூரில் இல்லாமல் சென்னை திரும்பினார். இதனால் அவர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இறந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சத்தை விஜய் வழங்கினார். இந்த சம்பவம் நடந்து நாளையுடன் ஒரு மாதம் ஆகப்போகிறது. இந்நிலையில் தான் கூட்ட நெரிசலில் சிக்கி உறவுகளை இழந்தவர்களின் குடும்பத்தினரை நாளை சந்திக்க உள்ளார். நாளை மாமல்லபுரத்தில் வைத்து ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனியாக சந்தித்து ஆறுதல் கூற உள்ளார் விஜய். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
விஜயின் இந்த செயலும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. உறவுகளை இழந்து நிற்கும் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்க முடியாத நிலையில் விஜய் இருக்கிறார். இவர் எப்படி ஓட்டு கேட்டு வெளியே வருவார்? வெற்றி பெற்றால் எப்படி மக்களை சந்திப்பார்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி பனையூர் பண்ணையார்.. இறங்கி வரவேமாட்டார் என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி சென்னையில் அவரது புகழுரை பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது தவெக தலைவர் விஜயை, சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதுபற்றி சீமான் கூறுகையில், ‛‛செத்துப்போன குடும்பத்தினர் அனைவரையும் பனையூருக்கு வா என்று சொல்கிறார். அப்படி என்றால் தேர்தல் நேரத்தில் அனைத்து ஓட்டு பெட்டிகளையும் பனையூரில் வை என்று சொல்வாரா? என்னங்க இது.. பண்ணையார் கூட பஞ்சாயத்துக்கு வருவார். ஆனால் பனையூர் பஞ்சாயத்து என் வீட்டில் தான்.. ஆலமரத்துக்கு வரமாட்டேனு இருக்கிறார். வீட்டில் தான் பஞ்சாயத்து.. என்னடா என்றால் நாட்டாமையை தாண்டிய நாட்டாமையாக இருக்கிறது.
இனி இங்க வருவோம். ‛கருணையற்ற ஆட்சி ஒழிக..அருள்நிறைந்த சன்மார்க்கர் ஆள்க' என்கிறார். தாத்தனுடைய வார்த்தையை உள்வாங்கி கொள்ள வேண்டும். நேர்மறையாக சிந்தித்த வள்ளலார் மகானும், தெய்வ திருமகனும் கெடு சொல் சொன்னது இந்த ஒரு இடத்தில் தான். கருணையற்ற ஆட்சி ஒழிக என்கிறார்.
எந்த ஆட்சியை சொல்கிறார்? இந்த திராவிட ஆட்சியை தான். வழக்கு போட்டால் என் மேல் தான் போடுவாங்க.. யாரும் போயிடாதீங்க.. முக்கியமான செய்தி இருக்கிறது. வழக்கு என்றால் ஒன்று என் மேல் போடுவார்கள். இல்லாவிட்டால் கூட்டத்தை ஏற்பாடு செய்த என் அண்ணன் மீது போடுவார்கள். வழக்கு இல்லை என்றால் விடியாது கிழக்கு. 200க்கு மேல் போய்ட்டேன். தேர்தலுக்கு முன்னால் 300 அடிச்சிடலாம்'' என்றார்.












Click it and Unblock the Notifications