சீமான் முதல்வரானால் 'தல' அஜித் அமைச்சர் மட்டும்தான்.. 'தளபதி' விஜய்க்கு 'வேற வேற லெவல்' போஸ்ட்டாம்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாம் முதல்வரானா ஒவ்வொரு நடிகருக்கும் என்ன என்ன இலாகா ஒதுக்கப்படும் என சுவாரசியமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவீதத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் தனித்தே போட்டி என்பதை கடும் கொள்கையாகவும் பின்பற்றுகிறது.

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுக, சீமானின் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் சீமான் தரப்பு, கூட்டணியைத் தவிர்த்துக் கொண்டிருக்கிறது. இருந்த போதும் எப்படியும் சீமான் கட்சியை கூட்டணியில் சேர்ப்பதில் அதிமுக இடைவிடாமல் முயற்சிக்கிறது என்பது அரசியல் வட்டார தகவல்கள்.
அதேபோல நடிகர் விஜய், அரசியல் கட்சி தொடங்குவார் என தொடர்ந்து கூறி வருகிறார் சீமான். தம்பி விஜய் என எப்போதும் அழைக்கும் சீமான், தம்பி வரட்டும் பின்னர் கூட்டணி பற்றி பேசுவோம் என்கிறார். தமது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த 'விஜய்'யை 'உச்ச நடிகர்' என சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து விவாதங்களை ஏற்படுத்தியிருந்தார் சீமான். தொடக்கத்தில் விஜய் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பும் தெரிவித்தவர் சீமான்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சீமானிடம் நடிகர்களின் படங்களைக் காட்டி நீங்கள் முதல்வராகும் போது எந்தெந்த நடிகர்களுக்கு எந்த இலாகா ஒதுக்கப்படும் என சுவாரசியமாக பதில் அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், சிவகார்த்திகேயனுக்கு கலை இலக்கிய பண்பாட்டுத் துறை; தனுஷுக்கு செய்தி பிரிவு துறை அமைச்சர்; சிம்புவுக்கு விளையாட்டு இளைஞர் நலன் துறை; அஜித் குமாருக்கு மக்கள் நலன் - சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என சீமான் தெரிவித்திருக்கிறார்.
இந்த வரிசையில் நடிகர் விஜய்க்கு என்ன இலாகா? என்ற கேள்விக்கு, என் தம்பி வந்தா துணை முதல்வராக்குவேன்.. டெபுடி சீப் மினிஸ்டர் என பதிலளித்துள்ளார் சீமான்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications