எங்க ஊரில் எப்படி பறை அடிப்பீங்க? சீமான் செய்யாறு பொதுக்கூட்ட எதிர்ப்புக்கு காரணமே இதுதான்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிரமதேசம் பொதுக் கூட்டத்தில் பறை இசைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது.
Recommended Video
சோழப் பேரரசன் அரசேந்திரசோழன் பெருவிழா நிகழ்ச்சி திருவண்ணாமலை, செய்யாறு அருகே உள்ள பிரம்மதேசத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றார். அவர் வருகை தருவதற்காக விழா மேடையில் பறை இசை இசைக்கப்பட்டது.

சீமான் கூட்டம்
பிரம்மதேசம் கிராமத்தில் பறை இசைக்கக் கூடாது என ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சி கொடியும் ஏற்றக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்புகளை மேடையில் சீமான் ஆவேசமாக சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்தும் வந்தார். அப்போதும் சில எதிர்ப்பு குரல்கள் எழுந்ததால் பேசுவதை நிறுத்துவிட்டு இடையூறு செய்தவர்கள் நேரடியாக மோத மேடைக்கு வருமாறும் சீமான் அழைத்தார்.

கொடி ஏற்ற எதிர்ப்பதா?
இது தொடர்பாக சீமான் அக்கூட்டத்தில் பேசியதாவது: சேரர், சோழர்கள், பாண்டியர்கள் மூவரும் ஒருங்கிணைந்து நின்று போர் செய்திருந்தால் உலகில் அத்தனை நாடுகளும் நம்முடையதாகி இருக்கும். ஆனால் சொந்த ரத்தங்களுக்குள் யுத்தம் நடந்தது. இங்கே நம்மை கொடி ஏற்றக் கூடாது என்கிறார்கள். விஜயகாந்தும், எம்ஜிஆர், கருணாநிதியும், ஜெயலலிதாவும் கொடி ஏற்றும் போது என்ன செய்து கொண்டிருந்தார்களாம்?

உன்னை அடிக்கலை..
இந்த மண்ணின் மகன், மானத் தமிழ் மகன் கட்சிக் கொடி ஏற்றும் போது உங்களுக்கு வலி ஏற்படுவது ஏன்? நான் இங்கே பறையைத்தான் அடித்தேன்.. உன்னை அடிக்கவில்லை. புரியுதா? இந்த சேட்டையை எல்லாம் வேறு எங்கிட்டாவது வச்சுக்குங்க.. நான் கொஞ்சம் முன்னாடி வந்து இங்க உட்கார்ந்திருக்கும் போது, பறை அடிக்காதே- கொடி ஏற்றாதே என சொல்லிட்டு தப்பிச்சுட்டுப் போயிருப்பியா நீ? நீ எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் தப்பிச்சு போயிருவியா?

2 சீட், 3 சீட், பெட்டி வாங்குறது
பறை என்பது பறை அல்ல. என் இனத்தின் எழுச்சிமிகு குறியீடு. இது ஆதித் தமிழ் பறையடா- அதை அடித்து பகைமுகத்தில் அறையடா என்பதுதான் எங்கள் முழக்கம். 2 சீட், 3 சீட்டுக்கு... நீ.. வா மோதுவோம்.. தனிச்சு நிப்போம் வா.. 2024- ல் தனித்து நிற்போம்; 2026-ல் தனித்து நிற்போம். இது உன் கோட்டைன்னா.. ஒட்டுமொத்த தமிழ்நாடும் என் கோட்டை- விளையாட்டு பண்ணாதீங்க.. பேரம் பேசி பேசி பெட்டி வாங்கி நோட்டு வாங்கி சீட்டு வாங்கி கட்சி நடத்துகிறவன் நாங்க இல்லை. இவ்வாறு ஆவேசமாக பேசினார் சீமான்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications