வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யா..சீமான் அறிவித்த போது துள்ளி குதித்து ஆர்ப்பரித்தது யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான 40 நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்தார். அப்போது கிருஷ்ணகிரி தொகுதியில் சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுவார் என சீமான் அறிவித்த போது அவரது குடும்பம் துள்ளி குதித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. அக்கட்சியின் 40 வேட்பாளர்களை சீமான் நேற்று ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.

Seeman Wife very happy over Veerappan Daughter as Naam Tamilar Candidate


அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் சந்தனக் கடத்தல் மன்னன் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பன் மகள் வித்யாவை வேட்பாளராக அறிவித்தார் சீமான். பாஜகவில் இருந்தவர் வித்யா. சீமானால் நேற்று நாம் தமிழர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் மகள் வித்யாவை அறிமுகப்படுத்தும் முன்பாக "அடுத்தது கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி" என சீமான் குறிப்பிட்டார். அப்போது விண்ணதிர கோஷம் எழுந்தது. கிருஷ்ணகிரி தொகுதி என்ற உடன் எழுந்த இளம் பெண், நாம் தமிழர் பாணியில் கைகளை உயர்த்தினார். அடங்க மறுத்த ஆராவாரங்களுக்கு மத்தியில், கொஞ்ச நாளாக காடுதான் அதிர்ந்து கொண்டிருந்தது.. இப்போது நாடும் அதிர்ந்து கொண்டிருக்கிறது என்றார் சீமான். அத்துடன், என் அன்பு மகள், உன் பேரைக் கேட்டாலே அதிருதும்பாங்க.. அதுமாதிரி.. என் அன்புமகள்.. அவர் வனக்காப்பாளர் மகள்.. நான் இனக்காப்பாளன் மகன்.. இரண்டு பேரும் இணைந்து இந்த தேர்தல் களத்தில் நிற்கிறோம். உங்கள் பிள்ளைகள் எங்களை கைவிட்டு விடாதீர்கள்.. வனம் காக்க எங்கள் ஐயா (சந்தனக் கடத்தல் வீரப்பன்) போராடியது போல..இனம் காக்க என் மகள் போராடுவாள். காட்டை அவர் (சந்தனக் கடத்தல் வீரப்பன்) காப்பாற்றி வைத்திருந்தார்.. என் மகள் இந்த நாட்டைக் காப்பாற்ற என்னுடன் இணைந்து நிற்கிறாள். கிருஷ்ணகிரி தொகுதியின் வெற்றி வேட்பாளராக என் அன்பு மகள் வித்யா வீரப்பன் அவர்களை அறிவிப்பதில் உண்மையில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்றார்.

Seeman Wife very happy over Veerappan Daughter as Naam Tamilar Candidate

அப்போது மேடையின் கீழே மகன் மாவீரன் பிரபாகரனுடன் நின்று கொண்டிருந்த சீமான் மனைவி கயல்விழி காளிமுத்து, துள்ளி குதித்தபடியே உரக்க குரல் எழுப்பி கைகளை தட்டி ஆராவாரம் செய்தார். இதனைத் தொடர்ந்து மாவீரன் பிரபாகரனும் கை தட்டினார். வீரப்பன் மகளை வேட்பாளராக சீமான் அறிவித்த போது கயல்விழி துள்ளி குதித்து கை தட்டி ஆரவாரம் செய்யும் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+