சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருவொற்றியூரில் முதல் வெற்றியை ருசிப்பாரா சீமான்.. கள நிலவரம் சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: திருவொற்றியூர் தொகுதியில் இதுவரை நடைபெற்ற 12 தேர்தல்களில் 6-ல் திமுகவும், 4-ல் அதிமுகவும் வெற்றியை ருசித்துள்ளன.

பலம் வாய்ந்த திமுக, அதிமுக வேட்பாளர்களை வீழ்த்தும் வகையில் இளைஞர்களை கவரும் வகையில் சீமான் வாக்கு வேட்டை நடத்தி வருகிறார்.

மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகம் உள்ள இந்த தொகுதியில் தற்போதைய திமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வும் சரிவர அடிப்படை வசதிகள் செய்யவில்லை என்பது குற்றச்சாட்டு உள்ளது.

 நட்சத்திர தொகுதியான திருவெற்றியூர்

நட்சத்திர தொகுதியான திருவெற்றியூர்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். முதலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட போகிறேன் என்று கூறிய சீமான், கடைசியில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக கூறி அதற்கான விளக்கமும் அளித்தார். சீமான் களமிறங்கி உள்ளதால் திருவெற்றியூர் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.

திமுக-அதிமுக சமபலம்

திமுக-அதிமுக சமபலம்

இந்த தொகுதியில் மொத்தம் 22 வேட்பாளர்கள் கோதாவில் இறங்கி உள்ளனர். அதிமுக சார்பில் கே.குப்பன், திமுக சார்பில் கே.பி.பி.சங்கர், மக்கள் நீதி மய்யம் சார்பாக டி.மோகன், அமமுக சார்பாக சவுந்திரபாண்டியன் ஆகியோர் தேர்தலை சந்திக்கின்றனர். திருவெற்றியூர் தொகுதி திமுக, அதிமுகவுக்கு சம பலம் வாய்ந்த தொகுதியாகும். இதுவரை நடைபெற்ற 12 தேர்தல்களில் 6-ல் திமுகவும், 4-ல் அதிமுகவும் வெற்றியை ருசித்துள்ளன.

சீமான் புதிய வாக்குறுதி

சீமான் புதிய வாக்குறுதி

2019 நாடாளுமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் 15 ஆயிரம் வாக்குகளை நாம் தமிழர் கட்சி அறுவடை செய்தது. அதிமுக சார்பில் களமிறங்கும் கே.குப்பன் 1991, 2011 தேர்தல்களில் இங்கு வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதி வரை மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இதை முன்வைத்தே அதிமுக வேட்பாளர் கே.குப்பன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வேலைவாய்ப்பை உருவாக்கி தருவேன், புதிய மாற்றங்களை கொண்டு வருவேன் என்று கூறி சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுக மீதான அதிருப்தி

அதிமுக மீதான அதிருப்தி

2016-ம் ஆண்டு தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் 12,497 (7.24 சதவீதம்) வாக்குகள் பெற்றார். பலம் வாய்ந்த திமுக, அதிமுக வேட்பாளர்களை வீழ்த்தும் வகையில் இளைஞர்களை கவரும் வகையில் அவர் வாக்கு வேட்டை நடத்தி வருகிறார். அதிமுக அரசு மீதான அதிருப்தி காரணமாக அந்த வாக்குகள் திமுக பக்கம் ஒதுங்க வாய்ப்புள்ளது அதை சீமான் கைப்பற்ற வேண்டும்.

வெற்றி பெறப்போவது யார்?

வெற்றி பெறப்போவது யார்?

இதேபோல் மக்கள் நீதி மய்யம், அமமுக வேட்பாளர்களும் வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளது. மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகம் உள்ள இந்த தொகுதியில் தற்போதைய திமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வும் சரிவர அடிப்படை வசதிகள் செய்யவில்லை என்பது குற்றச்சாட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை தன் பக்கம் திருப்பி வாக்காளர்களிடம் இருந்து வாக்குகளை சீமான் பெற வேண்டும். மொத்தத்தில் திமுக, அதிமுக, சீமான் இடையே போட்டி பயங்கரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதன் முதலாக சீமான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Seeman is conducting a vote hunt to attract the youth to topple the strong DMK and AIADMK candidates
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X