"சேகர் ரெட்டி பே ரோல்".. ரகசிய டைரியில் சிக்கிய டாப் பெயர்கள்.. விலகப்போகும் மர்மம்- என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேகர் ரெட்டி வழக்கில் அதிமுகவின் முக்கிய புள்ளிகளுக்கும், அதிமுகவோடு நெருக்கமாக இருந்த தலைவர்களுக்கும் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சேகர் ரெட்டி சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சார்பாக வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. சிபிஐ வழக்கு இதில் முடிவிற்கு வந்துவிட்டது. இந்த நிலையில் சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியின் அடிப்படையில் அதிமுகவின் முக்கிய தலைவர்களுக்கு வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மொத்தமாக 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எதிர்கட்சித் தலைவவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், சி விஜயபாஸ்கர், வைத்திலிங்கம், முன்னாள் சபாநாயகர் தனபால், தங்கமணி, செல்லூர் ராஜு, எம்சி சம்பத், மறைந்த அதிமுக எம்எல்ஏ பாப்பா சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ கருணாஸ், தற்போது திமுகவில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டைரி

டைரி

அதாவது இந்த டைரியில் சேகர் ரெட்டி யாருடன் எல்லாம் பணப்பரிவர்த்தனை வைத்துக்கொண்டார். யாருக்கெல்லாம் ஒப்பந்த பணிகளுக்காக பணம் கொடுத்தார், பணம் வாங்கினார் என்ற லிஸ்ட் இடம்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இந்த லிஸ்டை சேகர் ரெட்டியின் பே ரோல் என்று வருமான வரித்துறையினர் கூறுகிறார்கள். அதாவது சேகர் ரெட்டியின் வரவு செலவு லிஸ்டில் இருந்த நபர்களின் விவரங்கள் அடங்கிய டைரி. அதில் ஒவ்வொரு பெயருக்கும் அருகே இவ்வளவு கோடி, இவ்வளவு லட்சம் என்று எண்கள் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொகை?

தொகை?

முன்னாள் அமைச்சர்களின் துறைகளுக்கு ஏற்றபடி, அவர்கள் வகித்த பொறுப்புகளுக்கு ஏற்றபடி பணம் கொடுக்கப்பட்டதாக இந்த டைரியில் விவரங்கள் அடங்கி இருந்ததாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் இருந்த பெயர்களின் அடிப்படையில்தான் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது கிட்டத்தட்ட ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நோட்டீஸ்தான். நான்கு வருடமாக சிபிஐ, அமலாக்கத்துறை இதை விசாரித்து வந்த நிலையில் தற்போது வருமான வரித்துறை இப்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்கிறார்கள்.

விசாரணை சூடு பிடிக்கிறது?

விசாரணை சூடு பிடிக்கிறது?

இத்தனை நாட்கள் கழித்து இப்போதுதான் விசாரணை சூடு பிடித்துள்ளது. கிட்டத்தட்ட மொத்தமாக அதிமுக தரப்பில் டாப் தலைகள் எல்லோருக்கும் இந்த நோட்டீஸ் சென்றுள்ளது என்கிறார்கள். ஏன் பணம் கொடுக்கப்பட்டது, எதனால் பணம் கைமாறியது என்று விசாரிக்க உள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவிக்கிறது. சிபிஐ வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டாலும், வருமானவரித்துறை வழக்கு இதில் சேகர் ரெட்டிக்கும் அவர் டைரியில் இருந்த நபர்களுக்கும் செக் வைக்கும் ஒன்றாக மாறியுள்ளது. இந்த நோட்டீஸில் உள்ள நபர்கள் தங்களின் பெயர் ஏன் இதில் வந்தது என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சேகர் ரெட்டி

சேகர் ரெட்டி

சேகர் ரெட்டி தான் மணல் அள்ளி மட்டுமே சம்பாதித்தேன் என்று குறிப்பிட்டு உள்ளார். சிபிஐ விசாரணைகளில் இந்த வாக்குமூலத்தை அளித்து உள்ளார். ஆனாலும் குறுகிய காலத்தில் இவர் எப்படி இவ்வளவு கோடிகளை மணல் வியாபாரம் மூலம் சம்பாதித்தார் என்ற கேள்விகளை வருமானவரித்துறை கேட்டு வந்தது. இந்த நிலையில்தான் இந்த வழக்கு விசாரணையில் வருமான வரித்துறை வேகம் காட்ட தொடங்கி உள்ளது.

முக்கியமா?

முக்கியமா?

பொதுவாக வருமான வரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்டும் நோட்ஸ் போன்ற டைரிகள் முக்கியம் கிடையாது என்று சில வழக்குகளில் நீதிமன்றங்கள் தெரிவித்து இருக்கின்றன. இதனால் இதை அடிப்படை ஆதாரமாக வருமானவரித்துறை வழக்கை மொத்தமாக முன்னெடுக்காது. ஆனால் இதை மையமாக வைத்து விசாரணை நடத்தப்படும். இந்த டைரியை முகாந்திரமாக வைத்து மற்ற விசாரணைகள் நடத்தப்படும், மற்ற ஆதாரங்கள் திரட்டப்படும்.. அதன் மூலம் பல மர்மங்கள் வெளியே வரும் வாய்ப்புகள் உள்ளன என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+