வெளியேறிய எடப்பாடி பழனிசாமி.. பேட்ஜை கழற்றிவிட்டு சட்டசபையில் பேசிய செங்கோட்டையன்! பனிப்போர் உச்சம்?
சென்னை: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் வெளியேறாமல் சட்டசபைக்குள் அமர்ந்திருந்தார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையேயான மோதல் தொடர்ந்து வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
சட்டசபையில் டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தார். "டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதை பற்றி விவாதிக்க முடியாது. ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியபோது பேச அனுமதிக்கவில்லை" எனக் கூறினார்.

இதையடுத்து, சட்டசபை கூட்டம் நடக்கும்போது, முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தும் பதாகையை காட்டியதால், அவையில் இருந்து 13 அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இசக்கி சுப்பையா உள்ளிட்ட 13 அதிமுக உறுப்பினர்கள் பதாகைகளை தூக்கிக் காட்டினர். அவர்கள் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
மேலும், மற்றவர்கள் சட்டையில் அணிந்திருக்கும் பேட்ஜ்ஜை கழற்றிவிட்டு வந்தால் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அவைக்குள் இருந்தனர்.
அதேசமயம், அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையன் அவைக்குள்ளே இருந்தார். வெளிநடப்பு செய்தபோது, அதிமுகவினருடன் சேர்ந்து சென்ற ஒருசில நொடிகளில் செங்கோட்டையன் மீண்டும் அவைக்குள் திரும்பினார். தனது தொகுதியில் உள்ள சாயக்கழிவு பிரச்சனை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கலந்து கொண்டு பேசினார்.
மேலும், சட்டையில் அணிந்திருந்த "அந்த தியாகி யார்?” பேட்ஜை அகற்ற சபாநாயகர் உத்தரவிட்டதால், பேட்ஜை கழற்றி வைத்துவிட்டு செங்கோட்டையன் பேசினார். ஏற்கனவே செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இடையே பனிப்போர் நிலவுவதாக கூறப்படும் நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேறிய நிலையிலும், அவர் சட்டசபை விவாதத்தில் பங்கேற்றதன் மூலம் மோதல் பொக்கு வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
-
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
செங்கோட்டையன் டக்னு விஜய் பாலாஜியை கட்டிப்பிடித்து, "தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே"! அமைச்சர் குஷி -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications