“செங்கோட்டையனுக்கு பிடிக்கிற மாதிரி பதில் கிடைக்கும்”.. அமைச்சர் பேச்சால் திரும்பிப் பார்த்த தலைகள்!
சென்னை: "செங்கோட்டையனுக்கு பிடிக்கிற மாதிரியான பதில், மானிய கோரிக்கையில் வரும்" என இன்று சட்டசபையில் கேள்வி நேரத்தில் செங்கோட்டையனின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெற்றது.

அதற்கு முன்னதாக இன்று காலை தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார்.
முன்னதாக பட்ஜெட் தாக்கல், வேளாண் பட்ஜெட் தாக்கல் அன்று நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இன்றைய கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து, செங்கோட்டையனை சமாதானப்படுத்தும் முயற்சியில் அ.தி.மு.க மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் ஈடுபட்டனர்.
பட்ஜெட் மீதான விவாதம் நடத்த இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியதும் பி.ஆர்.சுந்தரம், கோவிந்தராஜலு, குணசீலன் ஆகிய மூன்று மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். மேலும் பி.ஆர்.சுந்தரம், கோவிந்தராஜலு, குணசீலன் ஆகிய மூன்று மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதன்பின் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து வினாக்கள் - விடை நேரம் தொடங்கியதும், அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். ஈரோடு முதல் கோபிசெட்டிப்பாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் கோபி நகரம் மிகுந்த நெரிசல் ஏற்படுகிறது. அங்கு ஒரு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை விடுத்தேன். பணிகள் நடைபெறும் என கடந்த நிதியாண்டில் அமைச்சர் பதில் அளித்தார். ஆனால் தற்போது வரை பணிகள் நடைபெறவில்லை. இந்தப் பணிகளை நிறைவேற்ற அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.
செங்கோட்டையனின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "உறுப்பினர் சொல்வது உண்மை தான். கோபிசெட்டிப்பாளையத்தில் நெரிசல் அதிகம் உள்ளது. அங்கு நான்கு வழிச்சாலை என்ற அடிப்படையில் தான் பணிகள் நடைபெற்று வருகிறது. உறுப்பினர் செங்கோட்டையன் கேள்விக்கு அவருக்கு பிடிக்கும் பதிலை மானியக் கோரிக்கையின் மீது தெரிவிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மைக்காலமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இந்தச் சூழலில், இன்று சட்டசபையில் செங்கோட்டையன் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு சொன்ன பதிலை அனைவரும் உன்னிப்பாக கவனித்தனர்.
-
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்?












Click it and Unblock the Notifications