பாஜகவுக்கு விஜய் மறைமுக சப்போர்ட்டா? வந்து விழுந்த கேள்வி.. ஹெச். ராஜா என்ன சொன்னார் பாருங்க
சென்னை: நடிகர் விஜய் பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கிறாரா என்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஹெச். ராஜா பதில் அளித்துள்ளார். மேலும் தற்போது விஜய் சோதனை கால கட்டத்தில் உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ள விஜய், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை எனவும் 2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என்றும் கூறியுள்ளார். விஜயின் அரசியல் அறிவிப்புக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிடம் விஜய் அரசியல் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதவாது, நடிகர் விஜய் பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கிறாரா என்பது குறித்து பாஜக ஹெச். ராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஹெச் ராஜா கூறியதாவது:-
வரவேற்கிறேன்: நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தெளிவாக சொல்லியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் தெளிவாக சொல்லியிருக்கிறார். மறைமுகமாக யாரும் ஆதரவு கொடுக்க முடியாது. 18 வயது பூர்த்தி அடைந்த யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம், அரசியலுக்கு வரலாம். அரசியல் மூலமாக மக்கள் பணி ஆற்றுகிறேன் என்று சொன்னால் வரவேற்கிறோம்.
அவரது கொள்கை, அரசியல் பற்றிய நிலைப்பாடுகள் அது எடுக்கும் போது தான் அதைப்பற்றி விமர்சிக்க முடியும். இப்போது அவர் அரசியலுக்கு வருகிறார் என்று சொல்லியிருப்பதை வரவேற்கிறோம். வாழ்த்துக்கிறோம். இந்த நடிகர் வந்தார் எம்ஜிஆர் ஆனார்? அந்த நடிகர் வந்தார் எம்ஜிஆர் ஆனாரா? என்பது பற்றி நான் எதாவது சொல்லி அது வைரலாகியதுன்னா? நல்லா இருக்காது.
சோதனை காலக்கட்டம்: அரசியல் நிலைப்பாடு குறித்து அவர் கருத்து சொல்லும் போது தான் அது சரியா தவறா என்று நாம் கருத்து சொல்ல முடியும். அதுவரை அவரை வரவேற்போம். தற்போது ஹீ இஸ் அன் டெஸ்டடு.. அதாவது விஜய் சோதனை காலக்கட்டத்தில் உள்ளார். எப்போது டெஸ்ட் ஆகும் என்றால் அவர் போட்டியிடும் போதுதான். எனவே இப்பாது நான் எதுவும் கூற முடியாது.
பாரபட்சமான அரசியல் நடவடிக்கை அதிகம் ஆகிவிட்டது. தொடர்ந்து திமுக ஆட்சியில் வந்ததில் இருந்து, போலீஸ் யூனிபார்மை மாத்திவிடுவாங்களோ என்ற பயம் இருக்கிறது. நீங்க கருப்பு சிவப்பு துண்டு போட்டுக்க வேண்டும் என்று இந்த அரசாங்கம் சொல்லிவிட போகிறது. ஸ்பாட்டிலேயே இல்ல அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு. என்னுடைய கேள்வி.. தேசியவாதிகளுக்கு மட்டும் எதிராக மட்டும் தான் காவல்துறை பயன்படுத்துமா? இவ்வாறு அவர் கூறினார்.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்! -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி











Click it and Unblock the Notifications