Inept, inefficient, incompetent.. ஆ.ராசா விவகாரத்தில் தமிழக போலீஸுக்கு பாஜக எச்.ராஜா கடும் வசைமழை!
சென்னை: திமுக மூத்த தலைவர் ஆ.ராசாவின் சூத்திரர் யார் என்ற பேச்சு தொடர்பாக கோவை மாவட்ட பாஜக தலைவர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டதற்கு பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஆ. ராசாவை கைது செய்ய துணிச்சலற்ற inept, inefficient, incompetent, and fearsome தமிழக காவல்துறை என்றும் எச்.ராஜா விமர்சித்துளார்.
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக ஆ.ராசாவின் பேச்சுதான் பேசுபொருளாக விவாதப் பொருளாகி உள்ளது. இதனைவைத்து பாஜக பல்வேறு நடவடிக்கைகளுக்கும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

ஆ.ராசா பேச்சு
சென்னை நிகழ்ச்சியில் பேசிய மூத்த திமுக தலைவர் ஆ.ராசா, ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என கூறியிருந்தார்.

பாஜக போராட்டம்
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு எதிராக பாஜக பொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் போலீசில் புகார் கொடுப்போம்; வழக்கு தொடருவோம்; கையெழுத்து இயக்கம் நடத்துவோம் என்கிறது. இன்னொரு பக்கம், ஆ.ராசாவின் நாக்கை வெட்டுவோருக்கு ரூ1 கோடி பரிசு என அறிவிக்கின்றனர் வலதுசாரிகள். இதனை பயன்படுத்தி வன்முறையில் ஈடுபடவும் வலதுசாரிகள் தீவிரமாக முயற்சிக்கின்றனர்.

எச்.ராஜா வசைமழை
இந்நிலையில் பாஜகவினர் போராட்டம் நடத்திய இடங்களில் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். கோவை பாஜகவினரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பதிவிட்டுள்ளதாவது: இந்துக்களை .....மகன்கள் என்ற திமுகவின் ஆ. ராசாவை கைது செய்ய துணிச்சலற்ற ( inept, inefficient, incompetent, and fearsome) தமிழக காவல்துறை பாஜக கோவை மாவட்டத் தலைவர் மற்றும் 10 நபர்களை அடித்து துன்புறுத்தி கைது செய்துள்ள தமிழக காவல்துறையின் செயல் வன்மையாக கண்டிக்க தக்கது என பதிவிட்டுள்ளார்.

காங். மீது காண்டு
மேலும், தேர்தல் வந்தால் வட மாநிலங்களில் கோட்டிற்கு மேல் பூணூல் போட்டுகொண்டு நான் ஜினோதாரி (பூணூல்) போட்ட கவுல் பிராமணர் என்று விளம்பரம் செய்து இந்துக்களை ஏமாற்றும் போலி ராகுல் ஆ.ராசா இந்துக்கள் அனைவரும் விபச்சாரி மகன் என்று சொல்லியும் மௌனம் காப்பது ஏன்?திமுக, காங் இரண்டும் இந்து விரோதியே எனவும் கொதித்துள்ளார் எச்.ராஜா.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications