தமிழக காங்கிரஸில் அந்த "மூன்று 420" தலைவர்கள்... வீடியோ ஆதாரத்துடன் கடுப்படித்த ராகுல் காந்தி!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியில் மூன்று 420 தலைவர்கள் இருக்கிறார்கள் என ஒரு வீடியோ ஆதாரத்துடன் தம்மை சந்தித்தவர்களிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்தார் என்பதுதான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறதாம்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரான கே.எஸ்.அழகிரியை மாற்றியே தீருவது என்பதில் மேலிடம் உறுதியாக இருக்கிறது. இதனால்தான் எப்படியாவது காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை வாங்கிவிட வேண்டும் என சீனியர்கள் முட்டி மோதுகின்றனர்.
அதுவும் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் அத்தனை பேரும் படுதீவிரமாக உள்ளனர். இதற்காக டெல்லியிலேயே முகாமிட்டு எத்தனை வழிகள் இருக்கிறதோ அத்தனை வழிகளையும் கையில் எடுத்திருக்கின்றனர்.

காங். செயல் தலைவர்கள்
இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாற்றத்தின் போது கையோடு புதிய செயல் தலைவர்களையும் நியமிப்பது என்பதிலும் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக உள்ளது. புதிய செயல் தலைவர்கள் யார் என்பதில்தான் சற்று குழப்பம் தொடருகிறதாம். அதனால் தலைவர் பதவி மாற்றம் உடனே நடக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

டெல்லிக்கு வீடியோ புகார்கள்
மேலும் செயல் தலைவர் பதவியை முன்வைத்து நடக்கும் அத்தனை பேரங்களும் வீடியோ ஆதாரங்களுடன் டெல்லிக்கு அடுத்தடுத்து அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறதாம். இதனால் டெல்லி மேலிடம் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மீது கடும் கோபத்திலும் அதிருப்தியிலும் இருக்கிறதாம். அண்மையில் தமிழக காங்கிரஸ் எம்.பி. ஒருவர் ராகுல் காந்தியை சந்தித்து கட்சி நிலவரம் குறித்து சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

ராகுல் காட்டிய வீடியோ
அப்போது ராகுல் காந்தி, நீங்கள் சொல்ற தகவல்கள் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.. ஆனால் இந்த வீடியோக்களைப் பாருங்க.. கட்சி பதவிக்காக இப்படியா செய்வாங்க? தமிழக அரசியலைவிட தமிழக காங்கிரஸில் நடக்கும் அரசியல்தான் வொர்ஸ்ட்டாக இருக்கிறது என்றதுடன் அந்த வீடியோக்களையும் போட்டு காட்டியிருக்கிறார். அதில் பண பரிமாற்றங்கள், தேர்தலை முன்வைத்து நடந்த பண ஆதாயங்கள் ஆகியவை அசைக்க முடியாத ஆணித்தரமாக ஆதாரமாக இருந்தனவாம்.

அந்த 420 தலைவர்கள்
மேலும், இப்படி எல்லாம் செய்தால் காங்கிரஸ் கட்சி எப்படிதான் வளரும்? காங்கிரஸ் கட்சியை வைத்து வியாபாரம் செய்கிறார்களா? தமிழக காங்கிரஸ் கமிட்டியில் மூன்று 420 தலைவர்கள் இருக்கிறார்கள்...எனவும் ஆவேசப்பட்டிருக்கிறார் ராகுல் காந்தி. இது தொடர்பாக நம்மிடம் தகவலைப் பகிர்ந்து கொண்ட அந்த எம்.பி.யிடம் யார் அந்த மூன்று 420 தலைவர்கள் என கேட்ட போது, உயரத்தில் இருப்பவர்; அவருக்கு பொறுப்பாளர்; அந்த பொறுப்பாளரை கண்காணிப்பவர் என மேல்மட்டங்களை கோடிட்டு காட்டினார். இப்போது காங்கிரஸ் வட்டாரங்களில் ராகுல் காந்தியின் இந்த 420 கமெண்ட்தான் பரபரப்பாகவும்ன் பேசப்படுகிறது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications