தமிழ்நாடு பெயர் சூட்ட வேண்டும் ஏன்? 1960-ல் சட்டசபையில் சிங்கமாக கர்ஜித்த பேராசிரியர் க.அன்பழகன்
சென்னை: மெட்ராஸ் பிரசிடென்சி என அழைக்கப்பட்டு வந்த தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிட வலியுறுத்தி 1960களில் தமிழ்நாடு சட்டசபையில் மறைந்த திமுக பொதுச்செயலாளரும் முதுபெரும் திராவிடர் இயக்க தலைவருமான பேராசிரியர் க.அன்பழகன் ஆவேசமாக உரையாற்றினார்.
Recommended Video
1960-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி தமிழ்நாடு சட்டசபையில் பேராசிரியர் க.அன்பழகன், தமிழ்நாடு பெயர் சூட்டிட வலியுறுத்தி ஆற்றிய உரை:
தமிழ்நாடு என பெயர் வைப்பதற்கு இவ்வளவு மறுப்புச் சொல்கிறவர்கள், தமிழ்நாடு எனச் சொன்னால் என்ன இழுக்கு என்று சொல்லட்டும். தமிழன் மூச்சோடு வாழ்கிற வரையில், தமிழ்நாட்டில் தமிழ் இனம் இருக்கிற வரையில், தமிழர் என்று ஓர் இனம் உண்டு, தனியே அவருக்கொரு குணம் உண்டு என்று நாமக்கல் கவிஞர் பெருமையாகப் பாடியிருக்கிற மக்கள் உள்ள வரையில் அவர்களுக்கு அடையாளமாக என்ன தரப் போகிறீர்கள் என்று கேட்கிறேன்.

தமிழ்நாடு என்று பெயர் வைப்பதால் பிரிவினை நின்றுவிடாது. நாட்டிற்கு பெருமை எனக் கருதுவதால்தான் தமிழ்நாடு என பெயர் வைக்கக்கோரி கேட்கிறோம். அதேபோல, சங்ககால இலக்கியங்களில் தமிழ்நாடு என்ற பெயர் இல்லையென சொல்வது சரியல்ல. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களில், சேர, சோழ, பாண்டிய நாடுகள் தனித்தனியாக இருந்த காலத்தில் தமிழ்நாடு என்ற பெயர் இருந்திருக்கிறது.
சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பாடல்களில் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெற்றிருந்ததை அதை படித்துப் பார்த்தாலே நன்றாகத் தெரிய வரும். தண்டமிழ் வேலி தமிழ்நாட்டுக்கு அகமெல்லாம் என பரிபாடலிலும், இமிழ் கடல்வேலி தமிழகம் என பதிற்றுப் பத்து ஏட்டிலும், தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர் என சிலப்பதிகாரத்திலும் ஒலிக்கிறது.
பழங்காலத்திலிருந்தே தமிழ்நாட்டை ஆண்டு வந்த வேந்தர்கள் இப்பெயரை ஏற்றிருந்திருக்கிறார்கள். இந்த தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் செய்யக் கோருவது திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மட்டுமே சொல்லியிருந்தாலாவது ஏற்கமாட்டேன் என நீங்கள் சொல்லலாம். தமிழ்நாடு என்ற பெயரை வைக்க வேண்டுமென்று தமிழ்ப் பெரியார் திரு.வி.க சொல்லியிருக்கிறார்.
விருதுநகரைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் இதற்காக உண்ணாவிரதமிருந்து இன்னுயிர் நீத்தார். தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்டு அதனை காதாரக் கேட்க வேண்டும் என நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு எனும் பெயரை வைத்துத் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும். பெருமைப்படுத்த வேண்டும். அப்பெயரைக் கொண்டே இந்நாட்டுக்கு புகழ்முடிசூட்டவேண்டும் என வேண்டிக்கேட்ட தமிழறிஞர்கள் பற்பல. மத்தியில் ஆட்சியில் உள்ள அகில இந்திய காங்கிரஸே இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கையில் இங்குள்ளவர்களுக்கு மட்டும் ஏன் மனம் வரவில்லை? முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சொல்லியும் ஏன் இந்த மறுப்பு? இவ்வாறு பேராசிரியர் க.அன்பழகன் உரையாற்றினார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications