மூத்த பத்திரிக்கையாளார் சுதாங்கன் உடல்நலக் குறைவால் காலமானார்!
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். விகடன், தினமணி மற்றும் சில தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர் சுதாங்கன் . இவரது மறைவுக்கு பல்வேறு பத்திரிக்கையாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் பத்திரிக்கை உலகில் மிகவும் பிரபலமானவர் சுதாங்கன். பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியவர். இவருக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓஎம்ஆரில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையின் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

வீட்டில் இருக்கும்போது, தவறி விழுந்து தோளில் பலமான அடி ஏற்பட்டதாக கூறப்பட்டது. சுதாங்கன் அழைப்பின் பேரில் அவரது நண்பர் அவருடைய வீட்டுக்கு சென்றுள்ளார். உடனடியாக அவரை அப்போல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பரிசோதனையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட்டதாக செய்தி வெளியானது.
இவரது மகன் ஆகாஷ் துபாயில் இருக்கிறார். இவரது உடல்நலம் குறித்து நண்பர்களிடம் விசாரித்து வந்துள்ளார். தந்தையின் நிலையை அறிந்து இந்தியா வருவதற்கு முடிவு செய்து இருந்ததாக தெரிய வந்துள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை?












Click it and Unblock the Notifications