சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணே எங்களுக்கு? துண்டை போட்டு வைத்த முக்கிய “தலைகள்”! கடுப்படித்த எடப்பாடி? இப்பவே ஆரம்பிச்சாச்சா?

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவியிலிருந்து நீக்கலாமென யூகங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், தற்போதே 'பொருளாளர்' பதவியை கைப்பற்ற முக்கிய சீனியர்கள் போர்க் கொடி தூக்கி வருவதால் எடப்பாடி பழனிசாமியே கடும் அதிர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

    ADMK-வில் நடைபெறும் உட்கட்சி பிரச்சனைகளுக்கு DMK-தான் காரணம் -சசிகலா குற்றச்சாட்டு

    அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது வெடித்த ஒற்றை தலைமை விவகாரம் பொதுக்குழு கூட்டத்தில் விசுவரூபம் எடுத்தது. கட்சியை முழு கட்டுப்பாட்டுக்குள் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்து இருப்பதையே நடந்து முடிந்த சம்பவங்கள் காட்டின.

    5 டாகுமெண்ட்.. அவமதிப்பு.. சூழ்ச்சி - எடப்பாடிக்கு எதிராக பக்காவாக காய்நகர்த்திய ஓபிஎஸ்.. என்னாகும்? 5 டாகுமெண்ட்.. அவமதிப்பு.. சூழ்ச்சி - எடப்பாடிக்கு எதிராக பக்காவாக காய்நகர்த்திய ஓபிஎஸ்.. என்னாகும்?

    அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தலைமை, கழக நிர்வாகிகள் எடப்பாடி அணிக்குத் தாவி விட்ட நிலையில், கடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி, அடுத்த அதிமுக பொதுக்குழுவை ஜூலை 11ஆம் தேதியன்று நடத்துவதற்கு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பொருளாளர் பதவி

    பொருளாளர் பதவி

    இந்நிலையில் அதற்கு முன்னதாகவே அல்லது பொதுக்குழுவின் போது என பன்னீர்செல்வம் தன்னிடம் வைத்திருக்கும் அதிகாரமிக்க பதவிகளை பதவி மற்றும் கட்சியின் பொருளாளர் பதவியை கைப்பற்ற வேண்டும் என எடப்பாடி தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவை பொருத்தவரை பொதுச் செயலாளர் பதவிக்கு அடுத்த இடத்தில் பொருளாளர் பதவி வைத்து பார்க்கப்படுகிறது இந்த பதவியை இதற்கு முன்னதாக ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் வகித்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஓபிஎஸ் நீக்கம்?

    ஓபிஎஸ் நீக்கம்?

    இந்நிலையில் தற்போது ஓபிஎஸ்ஐ கட்சியிலிருந்து நீக்கிவிட்டால் ஒருங்கிணைப்பாளர் பதவி ஒழிக்கப்படும் பின்னர் மீதம் இருக்கும் பொருளாளர் பதவி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி ஆகியவற்றை கைப்பற்ற எடப்பாடி திட்டம் போட்டுள்ளார் இதனை எடுத்தே கட்சியிலும் வெளியிலும் ஓ பன்னீர் செல்வத்துக்கு எதிரான முழக்கங்கள் எழுந்து வருகிறது. சமூக ஊடகங்களிலும் அதிமுக ஐடி விங்கை பயன்படுத்தி அதிமுகவுக்கு எதிராக ஓபிஎஸ் செயல்படுவதாக தகவல் பரப்பப்படுகிறது.

    தற்போதே விவாதம்

    தற்போதே விவாதம்

    எனவே பொருளாளர் பதவி பறிக்கப்பட்டால் அதற்குப்பிறகு யாருக்கு வழங்குவது என்ற விவாதம் தற்போது அதிமுகவில் எழத் தொடங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம், பொன்னையன், செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் அடிபடுகிறது. ஆனால் திண்டுக்கல் சீனிவாசன் ஏற்கனவே பொருளாளர் பதவியை வகித்திருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் விசுவாசத்துக்கும் நம்பகத்திற்கும் உரிய ஆளாக ஜெயக்குமாரே இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    நிர்வாகிகள் தீவிரம்

    நிர்வாகிகள் தீவிரம்

    இதில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது பொருளாளர் பதவியை பின்னர் பார்த்துக் கொள்வோம் என எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். ஆனால் சமுதாய ரீதியாக கவுண்டர் சமூகத்திற்கு அடுத்து வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த தனக்கு தான் வழங்க வேண்டும் என சிவி சண்முகம் கேட்டுள்ளார். அதே நேரத்தில் கடந்த ஆண்டுகளைப் போல பொருளாளர் பதவியை தேவர் சமூகத்திற்கே வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. காரணம் இதற்கு முன்னர் பொருளாளர் பதவி வகித்த டிடிவி தினகரன் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    எடப்பாடி பழனிசாமி அப்செட்

    எடப்பாடி பழனிசாமி அப்செட்

    எனவே அதனை ஈடு செய்யும் வகையில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் தற்போது எடப்பாடி அணியில் இணைந்துள்ள கேபி முனுசாமி உள்ளிட்டோரும் தங்களுக்கு தான் பொருளாளர் பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், இன்னும் ஆட்டமே ஆரம்பிக்கவில்லை அதற்குள் ரிசல்ட் கேட்டால் எப்படி என்பது போல கடும் அப்செட்டில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

    English summary
    Edappadi Palanisamy is said to be in a state of shock as key seniors are now raising the war flag to seize the post of 'treasurer', amid speculation that O. Panneer's wealth could be removed from the post of party co - ordinator and treasurer in the AIADMK's single leadership affair.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X