செந்தில் பாலாஜிக்கு திமுகவில் நிறைய எதிரிகள் இருக்காங்க.. பிரியன் பரபரப்பு பேட்டி
சென்னை: டாஸ்மாக் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது அபத்தம் என்று பத்திரிக்கையாளர் பிரியன் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜிக்கு திமுகவில் நிறைய எதிரிகள் உள்ளதாகவும் பிரியன் நேர்காணலில் கூறினார்.
'ஒன் இந்தியா அரசியல்' யூடியூப் சேனலுக்கு பத்திரிக்கையாளர் பிரியன் பிரத்யேமாக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் கேட்கும் போது, தமிழ்நாடு அமைச்சரவையில் செந்தில் பாலாஜி தொடர்ச்சியாக குறிவைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார், எதிர்க்கட்சிகள் பேசும் ஒவ்வொன்றும் அவருக்கு எதிராகவே இருக்கிறது. கள்ளச்சாரய விவகாரம் அவருக்கு பெரிய சிக்கலை தந்தது.

அடுத்ததாக வந்து டாஸ்மாக்கில் 10 ரூபாய் அதிகமாக வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதை எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் எடுத்து செல்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் புகார் அளித்து விட்டு வெளியே வந்து அதை பற்றி பேசுகிறார். கரூர் கம்பெனி என்று செந்தில் பாலாஜியை தொடர்புபடுத்தியே பேசுகிறார். டாஸ்மாக்கில் அதிகமாக வாங்கப்படும்காசு அவங்களுக்குத்தான் போகுது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர் கேட்டார்,
அதற்கு பதில் அளித்த பத்திரிக்கையாளர் பிரியன், கள்ளச்சாராய விவகாரம் ஸ்டாலின் ஆட்சியில் மட்டுமல்ல தொடர்ந்து இருக்கின்ற விஷயம் தான். துக்ககரமான விஷயம் நடந்துள்ளது. அதனாலயே இந்த மரணங்களை அலட்சியமாக விட்டு போக முடியாது. எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டுவார்கள் என்பது தெரிந்த விஷயம் தான். ஓரிடத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்றால் இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி, எஸ்பி, டிஐஜி வரை ஓரளவு எல்லாருக்கே தெரிந்திருக்கும். முதலமைச்சர் அளவில் தெரிந்திருக்குமா என்றால் நிச்சயம் தெரிந்திருக்காது.
முதலமைச்சர் போலீஸ்துறையின் அமைச்சராக உள்ளதால் , அதற்கு அவருக்கு பொறுப்பு இருக்கிறது. அதனால் முதல்வரை பார்த்து அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. அதிமுக ஆட்சியிலும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இப்போதும் ஓடுகிறது. இப்ப என்னென்னா, ஒரு விஷயம் தெரிந்த உடன் என்ன நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்பது முக்கியம். விஷயம் வெளியே வந்த உடன், உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சூப்பரண்ட் அளவில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோன்ற தொடர் நடவடிக்கைகள் மூலமாக தடுக்க முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள். ஆனால் காவல்துறையில்இருக்கும் சில கருப்பு ஆடுகள் காரணமாக செயல்படுத்த முடிவது இல்லை. கீழ்மட்ட கட்சிக்காரர்களும் (ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கார்கள்) செய்கிறார்கள்.

செந்தில் பாலாஜியிடம் இப்போது கள்ளச்சாராயம், டாஸ்மாக் மற்றும் விஷ சாராயம் குறித்து கேள்விகள் எழுப்புகிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த துறையின் அமைச்சர் என்பதால் கேள்விகள் எழுப்புகிறார்கள். கள்ளச்சாராயத்தை தடுப்பது போலீசின் வேலை. இந்த துறை முதல்வரிடம் உள்ளது. இந்த துறை செந்தில் பாலாஜியிடம் இல்லை. இதில் செந்தில் பாலாஜியிடம் கேட்க முடியாது.
செந்தில் பாலாஜியை டார்க்கெட் செய்ய காரணம்.. அண்ணாமலையின் அஜெண்டாவில் ஒருத்தர் இருக்கிறார்.. இவரை டார்க்கெட் செய்து அவருடையே நோக்கமாக இருக்கிறது. லோக்கல் அரசியல் காரணமாக எதிர்க்கப்படுகிறார் . செந்தில் பாலாஜி திமுகவில் பவர்புல் அமைச்சராக இருப்பதால் இவரது வளர்ச்சியை தடுக்க விரும்புகிறார்கள். அவரது வளர்ச்சி எரிச்சலை தந்திருப்பதால் தடுக்க நினைக்கிறார்கள்.
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்குவது எல்லா ஆட்சி காலத்திலும் நடந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் வாங்கி இருக்கிறார்கள். அதற்கு முன்பு கலைஞர் ஆட்சியிலும் வாங்கியிருக்கிறார்கள். எல்லா ஆட்சியிலும் வாங்கியது தான். எடப்பாடி ஆட்சி காலத்தில்வாங்காமல் இருந்தார்களா.. எல்லா குடிகாரர்களுமே சொல்வார்கள் இதை.. கைபுண்ணுக்கு கண்ணாடி எதுக்கு. இருக்கும் 5 ஆயிரம் கடையிலும் வாங்குகிறார்கள். இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி நடவடிக்கை எடுப்போம் என்று கூறியிருக்கலாம்.
எந்த கடை என்றெல்லாம் கேட்டிருக்க தேவையில்லை. இதில் அவரது அணுகுமுறை தவறாக இருந்தது. டாஸ்மாக்கில் 10ரூபாய் அதிகமாக வாங்குவது காலம்காலமாக நடக்கிறது. இப்போது மட்டும்பூதகரமாக்கப்பட காரணம் செந்தில் பாலாஜி டார்க்கெட் செய்யப்படுவதுதான் காரணம்" என்று பிரியன் கூறினார். மேலும் செந்தில் பாலாஜிக்கு திமுகவில் நிறைய எதிரிகள் உள்ளதாகவும் பிரியன் கூறினார். முழு வீடியோவை செய்தியில் இணைத்துள்ளோம் பாருங்கள்.












Click it and Unblock the Notifications