"போலீஸ் ஸ்டேஷனை கொளுத்திருவேன்".. பகிரங்க மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ.. அதிரும் மேற்கு வங்கம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: "இனி பாஜகவினர் மீது கை வைத்தால் காவல் நிலையத்தை தீ வைத்து கொளுத்திவிடுவேன்" என்று அக்கட்சி எம்எல்ஏ ஸ்வபன் மஜும்தார் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருப்பது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை போல போலீஸார் செயல்பட்டால், பார்த்த இடத்திலேயே அவர்களுக்கு அடி விழும் எனவும் அவர் எச்சரித்தார்.

பாஜக எம்எஎல்ஏவின் இந்த பேச்சு மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது பேச்சுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் கொலைகள்

அரசியல் கொலைகள்

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவுகிறது. மேற்கு வங்கத்தில் தனிப்பெரும் சக்தியாக இருந்த திரிணமூல் காங்கிரஸுக்கு போட்டியாக பாஜக வளர்ந்து வருவது முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிடிக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க, திரிணமூல் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்படுவதும், சில சமயங்களில் கொலைகள் அரங்கேறுவதும் அங்கு வாடிக்கையாகிவிட்டது.

 பாஜக எம்எல்ஏ மிரட்டல்

பாஜக எம்எல்ஏ மிரட்டல்

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் நார்த் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் நேற்று பாஜக பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் அக்கட்சி எம்எல்ஏ ஸ்வபன் மஜும்தார் உரையாற்றினார். அப்போது அவர், "மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸாரின் அராஜகங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஆனால் அதை தடுக்க வேண்டிய போலீஸாரோ அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் செய்யும் அடாவடியை தட்டிக்கேட்கும் பாஜகவினரை போலீஸார் துன்புறுத்துகின்றனர்.

"கொளுத்தி விடுவேன்"

அவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைக்கின்றனர். குறிப்பாக, அசோக்நகர் காவல் நிலையத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் இதுபோன்ற செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். உங்களை திருத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில், உங்கள் காவல் நிலையத்தை தீ வைத்து கொளுத்திவிடுவேன். இனி திரிணமூல் காங்கிரஸ் ஏஜெண்ட்டுகளை போல போலீஸார் செயல்பட்டால், பார்த்த இடத்தில் அவர்களுக்கு அடி விழும்" என ஸ்வபன் மஜும்தார் பேசினார்.

பாஜக மழுப்பல்

பாஜக மழுப்பல்

எம்எல்ஏ ஸ்பவன் மஜும்தாரின் இந்த பேச்சுக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடைய, இந்த விவகாரம் குறித்து பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர் சமிக் பட்டாச்சார்யா, "மஜும்தாரின் பேச்சை பாஜக ஆதரிக்கவில்லை. எந்த சமயத்திலும் வன்முறையை பாஜக ஆதரிக்காது. இருந்தபோதிலும், மஜும்தாரின் வார்த்தையை விரக்தியின் வெளிப்பாடகவே பார்க்க வேண்டும். பாஜக ஆதரவாளர்கள் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டும் வருகிறார்கள். ஆனால், போலீஸார் அதை வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்" என சமிக் பட்டாச்சார்யா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+