சேது கால்வாய் திட்டம்.. பற்ற வைத்த செல்வப்பெருந்தகை..கொந்தளித்த அதிமுக.. ஓபிஎஸ் சொன்ன விளக்கம்
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று கார சார விவாதங்களுடன் சேது சமுத்திர திட்டம் குறித்த தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியுள்ளது. காங்கிரஸ் உறுப்பினர் செல்வ பெருந்தகை அவைக்குறிப்பில் உள்ளதை கூறுவதாக பேச, அதற்கு அதிமுக உறுப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க சலசலப்பு ஏற்பட்டது. நடந்தது என்ன என்று ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளிக்க ஒருவழியாக சபை அமைதியானது.
சேது சமுத்திர திட்டத்ததை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி அரசின் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.சட்டசபையில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , "தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேதுசமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது என்றார். உறுப்பினர்கள் ஒவ்வொருவராக எழுந்து ஆதரித்து பேசினர்.

வரலாற்று சிறப்பு மிக்க சேது சமுத்திர திட்டத்தை முன்மொழிந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதனை காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாங்கள் ஆதரிக்கிறோம். சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அவசியம் குறித்து முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
1986 முதல் 2016ஆம் ஆண்டு வரைக்கும் என்னென்ன அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. எந்தெந்த கட்சிகள் என்னென்ன நிலைப்பாட்டை எடுத்த என்று பார்க்கலாம். தமிழ்நாட்டிற்கு குறிப்பாக தென் தமிழ்நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சியை தரக்கூடிய திட்டம் இந்த சேது சமுத்திர திட்டம். மகுடமாக இருக்கிற இந்த திட்டத்தை ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக இருந்த போது இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டனர்.
இந்த திட்டத்தை ஆதரிக்கிறோம் என்று சொன்னவர்கள் தமிழகத்தின் நலனில் அக்கறை இருப்பது போல பேசியவர்கள் பற்றி எல்லாம் இந்த அவைக்குறிப்பிலே இருக்கிறது. எதற்காக தன்னுடைய நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வர காங்கிரஸ் அரசுதான் தயக்கம் காட்டுகிறது என்று முந்தைய காலங்களில் பேசியிருக்கிறார்கள். இன்றைக்கு அவர்கள் உயிரோடு இல்லை. திரிகோணமலையில் தனது ராணுவத்தளவாடங்களை அமைக்க அமெரிக்கா திட்டம் தீட்டுகிறது. அதற்கு உறுதுணையாக இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி தலைமையிலான அரசு இருக்கிறது என்று குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள் என்று பேசினார் செல்வ பெருந்தகை. அப்போது அவையில் சலசலப்பு நிலவியது.
செல்வ பெருந்தகையின் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, நான் உங்களை சொல்லலையே.. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லலையே என்று கையை விரித்து பேசினார். அப்போது சபாநாயகர் அப்பாவு... என்ன இது? எதுக்கு இது என்று கேட்டார். தொடர்ந்த செல்வ பெருந்தகை.. நான் யாருன்னு சொல்லலை.. எந்த கட்சின்னு சொல்லலை..நிலைப்பாட்டை சொல்றேன் என்று கூறினார்.
அப்போது சபாநாயகர் அப்பாவு, இதுல என்ன குத்தம் கண்டுபிடிச்சீங்க என்று கேட்டார். என்ன தவறுன்னு சொல்லுங்க அதை நான் மாற்றிக்கொள்கிறேன் என்றும் அப்பாவு சொன்னார். அந்த பாதை எப்படி வந்தது என்று சொல்கிறார் என்று செல்வ பெருந்தகை கூறியதாகவும் சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார். இவர் என்ன தவறு செய்தார் என்று சொல்லுங்கள் அதை நான் மாற்றுகிறேன் என்றும் சொன்னார். பொத்தம் பொதுவாக பேசக்கூடாதா என்றும் கேட்டார் சபாநாயகர். செங்கோட்டையன் நீங்க சொல்லுங்க என்று பேச அழைத்தார் அப்பாவு.
சட்டசபையில் பேசிய செங்கோட்டையன், ஒரு தீர்மானத்தை கொண்டு வரும் போது, காங்கிரஸ் கட்சியின் குழுவின் தலைவர், அதை ஆதரிக்கிறோமா? எதிர்கிறோமா என்றுதான் கருத்துக்களை சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு அந்த ஆட்சியில் முன்னாள் இருந்தவர்கள் என்றெல்லாம் சொல்வது சரியல்ல என்றார் செங்கோட்டையன். அவர் ஆதரித்தால் ஆதரிக்கட்டும் எங்களை கொச்சைப்படுத்தும் வகையில் வார்த்தைகள் பேச வேண்டாம் என்றார். அதற்கு சபாநாயகர் அப்பாவு, காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருப்பதாக முன்பு இருந்தவர்கள் பேசியிருப்பதாக கூறினார். அதில் என்ன குற்றம் கண்டு பிடித்தீர்கள். உங்களுக்கு வாய்ப்பு இருக்கு பேசுங்கள் என்றார். செல்வ பெருந்தகை பேசவே கூடாது என்று சொல்கிறீர்களா என்று கேட்டார். அவையில் சலசலப்பு நீடித்தது. தொடர்ந்து செல்வ பெருந்தகை பேசினார்.
ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது, அரசு சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வரும் போது, அதற்கு வலு சேர்க்கும் வகையில் ஆதரித்து பேச வேண்டுமே தவிர, கடந்த காலங்களில் பல்வேறு சட்டமன்றங்களில் பல்வேறு கருத்துக்களை பல்வேறு அரசியல் கட்சியினர் கூறியிருக்கலாம். அதை இப்போது பேசவோ, விவாதம் செய்யவோ நேரமில்லை. இந்த சபையை அதற்கு பயன்படுத்தக்கூடாது என்றுதான் நாங்கள் வலியுறுத்திக்கொண்டிருக்கிறோம். அவர்கள் பேச ஆரம்பித்தால் எல்லோரும் பேசக்கூடிய வாய்ப்பை உருவாக்கி தரவேண்டிய சூழ்நிலை உருவாகும் அது தேவையில்லாதது என்றார் ஓ.பன்னீர் செல்வம்
இந்த சலசலப்புக்கு மத்தியில் சபாநாயகர் அப்பாவு, முதல்வர் ஸ்டாலினை பேச அழைத்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின், இது ஒட்டு மொத்தமாக ஏக மனதாக நிறைவேற்ற வேண்டிய தீர்மானம். இதில் சச்சரவுகள், வாக்குவாதங்கள் தேவையில்லை. அவைக்குறிப்பில் இருப்பதைத்தான் செல்வ பெருந்தகை எடுத்துச்சொல்லியிருக்கிறார். எதிர்கட்சியைச்சேர்ந்தவர்கள் அது கூட இடம்பெறக்கூடாது என்று சொல்லவில்லை. இப்போது பேச வேண்டாம் என்று சொல்கிறார்கள். எனவே இந்த தீர்மானத்தை அனைவரும் ஏக மனதாக பிரச்சினை ஏதும் இன்றி நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் என்னென்ன பாதகங்கள் ஏற்படும் என்று கடந்த காலங்களில் சுற்றுச்சூழல்துறை சில விளக்கங்களை கொடுத்திருக்கிறது. இதனால்தான் அந்த திட்டத்தை செயல்படுத்த அப்போதய முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவில்லை. இனி வரும் காலங்களில் கால்வாய் வெட்டப்படும் போது பாதுகாப்பான முறையில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மணல் திரும்ப திரும்ப கால்வாயில் விழும் போது பல ஆயிரம் கோடி ரூபாய் வீணாகும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். இதைத்தான் சட்டசபையில் மீண்டும் நினைவு படுத்த கடமைபட்டிருக்கிறேன் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார். இந்த திட்டம் நல்ல திட்டம்தான்
ஆனால் சாதக பாதகங்களை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார் ஓ.பன்னீர் செல்வம். சட்டசபையில் கார சார விவாதங்கள் முடிந்த பின்னர் சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications