தாம்பரம் துணிக்கடையில் அதிபயங்கர தீவிபத்து.. 5 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்.. ஷாக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் பஞ்சாப் ஹேண்ட்லூம் என்ற கைத்தறி துணி விற்பனையகம் உள்ளது. இங்குப் பஞ்சாபில் இருந்து கைத்தறி துணிகள், கைவினை பொருட்களை, பஞ்சு மெத்தை, பெட்ஷீட், வீட்டு உபயோக விற்பனை செய்யப்படுகிறது.

several lakhs worth of cloths destroyed in a clothing store in Tambaram due to Fire accident

இந்த நிலையில் நேற்று இரவு (மே 12) 7.45 மணியளவில் முதல் தளத்தில் இருந்து புகை வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடை ஊழியர்கள் துணிகளைப் போட்டு புகையைக் கட்டுப்படுத்த முயன்றுள்ளனர், ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் புகையானது தீயாகப் பரவியது. இதனால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர்.

பின்னர் தீ வேகமாக 2 தளங்களுக்கும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்

தீ மிக வேகமாக அருகில் இருந்த கடைக்கும் தீயானது பரவியது. சுமார் 5 மணி நேரமாகத் தீயணைப்பு வீரர்கள் பலர் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து நாசமது.

இந்த விபத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை சரியாகத் தெரியவில்லை. இந்த தீ விபத்து குறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+