சில்மிஷம்.. 100-க்கும் மேற்பட்ட பெண்களை சீண்டிய 20 வயது இளைஞர்.. சென்னையில் சுற்றி வளைத்து கைது
பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்
சென்னை: சாலையில் எந்த பெண்ணை பார்த்தாலும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தினேஷ்குமார் என்ற இளைஞரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்.. 20 வயது இளைஞர்.. டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார்... இதற்கான படிப்புகள் ஆன்லைன் மூலமாக நடந்து வருகிறது.
எழும்பூரில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் வேலை செய்து கொண்டே, பயிற்சி பெற்று வருகிறார் இந்த இளைஞர்.. இதனிடையே வேலை முடிந்துவிட்டால், சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்வதுடன் அத்துமீறலிலும் ஈடுபடுவது இவரது வழக்கம்.

பாலியல் சீண்டல்
இதற்காகவே தினமும் காலை 5 மணிக்கு, வில்லிவாக்கத்தில் இருந்து எழும்பூர் வரை பைக்கில் செல்வாராம். எதிரே எந்த பெண் வந்தாலும், அவர்களை சீண்டி, சேட்டையும் செய்து வந்துள்ளதாக தெரிகிறது.. தனியாக பெண் வந்தால், பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த பெண்ணின் அருகில் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுவிட்டு, பிறகு வேகமாக பைக் எடுத்து கொண்டு பறந்து விடுவாராம்.

வாக்கிங்
இப்படித்தான் கடந்த 10-ந்தேதி அண்ணாநகர் பகுதியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் தன்னுடைய 2 மகள்களுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவரது இளைய மகளுக்கு 22 வயதாகிறது.. அவர்களுக்கு முன்னால் அந்த பெண் நடந்து செல்லவும், தனியாக வந்திருப்பதாக நினைத்து, தினேஷ்குமார். அந்த பெண்ணை சீண்டி உள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கத்தி கூச்சல் போடவும், பின்னால் வந்து கொண்டிருந்த அப்பா விரைந்து ஓடினார்..

தப்பி ஓட்டம்
அதற்குள் அந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டார். நடந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் உதவியுடன் தினேஷ் குமாரை எழும்பூரில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.. பிறகு அண்ணாநகர் மகளிர் போலீசில் செய்யப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை ஆரம்பமானது..

சிறையிலடைப்பு
அப்போது தினேஷ்குமார் தன்னுடைய வாக்குமூலத்தில், "எனக்கு சின்ன வயதில் இருந்தே இப்படி ஒரு எண்ணம் உள்ளது.. எந்த பெண் தனியாக நடந்து சென்றாலும், அவர்களை சீண்டி பார்க்கும் ஆசை வந்துவிடுகிறது.. இதுவரை 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் இப்படி தவறாக நடந்து கொண்டுள்ளேன்" என்று கூறினார்.. இறுதியில் தினேஷ்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications