ட்ரெஸ் மாத்தும் போது.. அடாவடியாக நுழைந்த டைரக்டர்! மிரண்டு போன ’இட்லி கடை’ நடிகை.. யார் அந்த சார்?
சென்னை: அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகை ஷாலினி பாண்டே தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தனது திரைப்பட கேரியரில் அதிர்ச்சிகரமான சம்பவத்தை சந்தித்ததாகவும், தென் இந்திய இயக்குனர் ஒருவர் தனது கேரவனுக்குள் உடைமாற்றும் போது சொல்லாமல் கொள்ளாமல் புகுந்ததாக அதிர்ச்சி தரும் தகவலை கூறி இருக்கிறார்.
நடிகராக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார் தனுஷ். பா பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அவர் அடுத்ததாக நான்காவதாக இட்லி கடை என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், அருண் விஜய், அசோக் செல்வன் ஆகியோரோடு பிரபல நடிகையான ஷாலினி பாண்டேவும் படத்தில் இணைந்திருக்கிறார். விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் டப்பா கார்டெல் வெப் சீரிஸில் நடித்துள்ள ஷாலினி பாண்டே அதன் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் சினிமா துறையில் தான் எதிர்கொண்ட பல சங்கடமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது தொடக்க காலத்தில் ஒரு தென்னிந்திய படத்தில் பணியாற்றும்போது எதிர்கொண்ட சங்கடமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
"ஒரு இயக்குநர் எனது அனுமதி இல்லாமல் என் கேரவனில் புகுந்துவிட்டார். உடை மாற்றிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது. நான் கோபமாகக் கேள்வி கேட்டவுடன் அவர் வெளியேறினார். ஆனால், என் செயலுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. மாறாக, அமைதியாக இருக்கவேண்டும் என்று சிலர் அறிவுரை கூறினார்கள்," என அவர் கூறியுள்ளார்
ஷாலினி பாண்டேவின் தகவல் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிய நிலையில், ரசிகர்கள் அந்த இயக்குநர் யார் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். நடிகை ஷாலினி பாண்டே ஆரம்பத்தில், சந்தீப் ரெட்டி வங்கா (அர்ஜுன் ரெட்டி), க்ரிஷ் (என்டிஆர் கதாநாயகுடு), சந்திரமௌலி (100% காதல்), மற்றும் ஜிஆர்கிருஷ்ணா (இத்தாரி லோகம் ஒக்காதே) ஆகிய தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், ஷாலின் பாண்டே இந்த இயக்குனர்களில் யாரைக் குறிப்பிடுகிறார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகை ஷாலினி பாண்டே அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்திப் ரெட்டி வாங்க கதன காயுது படத்தின் இயக்குனர் கிரிஷ் 100% காதல் படத்தின் இயக்குனர் சந்திர மௌலி லோகம் படத்தின் இயக்குனர் ஜி ஆர் கிருஷ்ணா ஆனால் அந்த இயக்குனர் யார் என்பது குறித்து ஷாலினி பாண்டே தெரிவிக்க மறுத்ததால் இது மர்மமாகவே தொடர்கிறது. அதே நேரத்தில் அவருக்கு நிகழ்ந்ததை தைரியமாக தெரிவித்ததற்காக பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த ஷாலினி பாண்டே 2017 ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். மகாநதி, மெரி நிம்மா, 100% காதல், கொரில்லா, கதாநாயகுடு, இத்தாரி லோகம் ஒக்காதே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது தமிழ் திரையரங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் இட்லி கடை படம் விரைவில் வெளியாக உள்ளது.












Click it and Unblock the Notifications