வீடு வீடாக கதவை தட்டிய அதிகாரிகள்.. அரசையே ஷாக் ஆக வைத்த லிஸ்ட்.. அட தமிழ்நாட்டிலா இப்படி?
சென்னை; தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் என்று திட்டம் மூலம் வீடு வீடாக மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் செய்யப்பட்ட சோதனையில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் என்று திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 2021 ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த திட்டம் அமலுக்கு வந்தது.
பயனாளிகள் இல்லங்களுக்கு சென்று மருந்து சேவைகள் வழங்கும் இந்த திட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு பொதுவான நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இந்த மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு முழுக்க திட்டம்: தமிழ்நாடு முழுக்க இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கு மருந்து வழங்குதல் போன்ற பல்வேறு மருத்துவ சேவைகள் இந்த திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நேரடியாக வீட்டிற்கே சென்று நோயாளிகளை கண்காணிப்பது, அவர்களுக்கு தவறாமல் இலவச மருந்து வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்த திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழ்நாட்டில் 112 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த திட்டம் மூலம் பயன் அடைந்துள்ளனர்.
அதிர்ச்சி தரும் தகவல்கள்: . இதில் செய்யப்பட்ட சோதனையில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. 2 ஆண்டுகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 55.1 லட்சம் புதிய உயர் இரத்த அழுத்த நோயாளிகள் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். இந்த திட்டம் இல்லை என்றால்.. இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டே இருக்க மாட்டார்கள். இந்த சோதனை இல்லை என்றால் இவர்களின் ரத்த அழுத்தம் உச்சத்திற்கு போக.. இவர்கள் பாதிப்பு அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன.
( பல நாள் கனவு.. நாளையோடு சென்னை ஐடி காரிடார் ஓஎம்ஆர் சாலையே மாறப்போகுது.. அடடா! என்னன்னு பாருங்க! )
31.53 லட்சம் சர்க்கரை நோயாளிகள் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். இந்த சோதனை இல்லையென்றால் சர்க்கரை வியாதி மோசம் அடைந்த பின் இவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. 26.15 லட்சம் நோயாளிகள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கணக்கெடுப்பில் இதுவரை தமிழ்நாட்டில் 112 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த திட்டம் மூலம் பயன் அடைந்துள்ளனர்.
அதிக அளவில் சோதனை; அதிக அளவில் மக்களுக்கு நேரடியாக சோதனைகள் செய்து, மருத்துவர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. நேரடியாக மருத்துவம் இவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் ரூ.1.50 கோடி செலவில் ஐந்து மாவட்டங்களுக்கான நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

தேசிய நலவாழ்வுக் குழுமத்தில், பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் 2021-22-ஆம் ஆண்டு கள ஆய்வறிக்கையின்படி, தவிர்க்கக்கூடிய பார்வை இழப்பிற்கான காரணிகள் மற்றும் பார்வை குறைபாட்டிற்கான முக்கிய காரணிகளில் முதியோர்களுக்கு ஏற்படும் கண்புரை ஒன்றாகும்.
இதை களையும் பொருட்டு, இப்பகுதிகளில் அதிகமான கண்புரை அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்துவதற்கும், நோயாளிகளை அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்கும் வசதியாக, மாவட்டத்திற்கு ஒரு நடமாடும் கண் மருத்துவப் பிரிவிற்காக புதிதாக வாகனம் வழங்கப்படுகிறது.
2021-22ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை. தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நடமாடும் கண் சிகிச்சை வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications