கிசான் நிதி உதவி பெற்றவர்கள்...பட்டியலை தமிழக அரசு வெளியிட வேண்டும்...டிடிவி தினகரன்!!
சென்னை: பிரதமரின் வேளாண்மை நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவதில் தமிழகத்தில் நடந்திருக்கும் மிகப்பெரிய மோசடி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில், ''பிரதமரின் வேளாண்மை நிதி வழங்கும் திட்டத்தின்கீழ்(Pradhan Mantri Kisan Samman Nidhi)விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவதில் தமிழகத்தில் நடந்திருக்கும் மிகப்பெரிய மோசடி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

ஒவ்வொரு மாவட்டமாக வெளியாகிவரும் தகவல்களைப் பார்க்கும்போது வலைப்பின்னல் போல இம்மோசடி அரங்கேறி இருப்பது தெளிவாகிறது. ஏழை,எளிய விவசாயிகளுக்கு சென்று சேரவேண்டிய உதவித்தொகையைப் பொய் கணக்குகள் மூலம் கையாடல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மாவட்ட வாரியாக இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற்றவர்களின் பட்டியலைத் தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக உயர்நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு இது தொடர்பான வழக்குகளைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications