சென்னையில் அடுத்த ஷாக்.. பெட்ரோல் பங்க்கில் பார்த்தீங்களா? கடுப்பான வாகன ஓட்டிகள்.. இதுதான் நிலைமை
சென்னை: சென்னையில் இன்றும்கூட சில பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. அதேசமயம், பல பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை புயல் காரணமாக தலைநகரமே தத்தளித்து காணப்படுகிறது.. 2 நாட்களுக்கு முன்பு சாலைகள் வெள்ளக்காடாக காட்சி தந்த நிலையில், ஓரளவு நிலைமை திரும்பி வருகிறது.. ரயில், பஸ் சேவைகள் செயல்பட்டு வருகின்றன.

ஆனால், மழை நின்றுவிட்டாலும்கூட, இன்னும் மழைநீர் முழுவதுமாக வடியவில்லை.. மழைநீர் அதிகமாக தேங்கி நிற்கும் இடங்களில் கரண்ட் இன்னும் வரவில்லை.. பல பகுதிகளில் மொபைல் சிக்னல் கிடைக்கவில்லை.. இதனால், அவரசத்துக்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல், மீட்பு குழுவினரே திணறிப்போயுள்ளனர்.
மின்தடை: பொதுமக்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் உள்ளனர். கோடம்பாக்கத்தில், ஒரு மெழுகுவர்த்தி 110 ரூபாய்க்கு விற்கிறார்களாம்.. பல இடங்களில் நீர் வடிய இன்னும் சில நாட்கள் ஆகும் என்கிறார்கள்..
இதனிடையே, பெட்ரோல் தட்டுப்பாடும் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. புயல் தினத்தன்று பல இடங்களில் கரண்ட் இல்லை.. அதனால், அன்றைய தினம் இரவுக்குள் வாகனங்களில் பெட்ரோலை நிரப்பி விட வேண்டும் என்று, சென்னையின் பல பெட்ரோல் பங்குகளுக்கு வாகன ஓட்டிகள் படையெடுத்தனர்.. ஆனால், பல இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் அடைக்கப்பட்டிருந்தன.. அண்ணாசாலை , கோட்டூர்புரம் போன்ற பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்று அறிவித்தே விட்டார்கள்.
தட்டுப்பாடு: எனினும், நேற்று முன்தினம், பெட்ரோல் தட்டுப்பாடுக்கு என்ன காரணம் என்றும், பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் விளக்கம் ஒன்றை தந்திருந்தது.. மழை நீர் கலந்திருக்கக்கூடும் என்பதால் பெட்ரோல், டீசலை உரிய முறையில் பரிசோதித்த பிறகே வாடிக்கையாளர்களுக்கு விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
டீசலில் தண்ணீர் கலந்தால் எளிதில் பிரித்தெடுத்து உடனே விநியோகிக்க முடியும், தண்ணீர் கலந்த பெட்ரோலை விநியோகித்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் உரிய ஆய்வு செய்து, தண்ணீர் கலக்கப்படவில்லை என்று உறுதிசெய்த பிறகே பெட்ரோல் விநியோகிக்க விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்..
பெட்ரோல் நீர்: எத்தனால் கலந்த பெட்ரோலில் கலந்துவிட்டால் நீரை பிரித்தெடுப்பது மிகவும் கடினம் என்பதால், உடனடியாக பெட்ரோல் விநியோகிக்க முடியவில்லை என்று விளக்கம் தந்திருந்தது.
இந்நிலையில், இன்று 4வது நாளாக பெட்ரோல் விநியோகம் தடைபட்டுள்ளது.. பல்வேறு இடங்களில் இன்னமும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நேற்றுமுன்தினம் சென்னையே முடங்கிவிட்ட நிலையில், நேற்றுதான் அலுவலகங்களுக்கு பலர் கிளம்பி சென்றனர்.. இதனால், பைக்குகள், கார்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக, பெட்ரோல் பங்க்குகளுக்கு படையெடுத்தனர்.
தட்டுப்பாடு: ஆனால், சில பெட்ரோல் பங்க்குகள் திறந்திருந்த போதிலும், பெட்ரோல், டீசல் போதிய அளவு இருப்பு வைக்காததால், தட்டுப்பாடு ஏற்பட்டது. சில பங்க்குகளில் மட்டும் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டது. அவற்றை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். இதனால், பங்க்குகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் பலமணி நேரம் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது.. இன்று காலையிலிருந்தே பல பங்க்குகளில் வரிசை நீண்டு காணப்படுகிறது.
இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் சொல்லும்போது, அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் தரைக்கு அடியிலேயே அதிக கொள்ளளவில், டேங்க்குகள் அமைக்கப்பட்டுள்ளன.. இவைகளில்தான், பெட்ரோல், டீசல் தனித்தனியே சேமிக்கப்படும்...
தற்போது பெய்துள்ள மழையால், சாலைகளில் தண்ணீர் வடியவில்லை..
பெட்ரோல் பங்க்: பல சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.. அதனால், பெட்ரோல் பங்க்கில் உள்ள டேங்க்குகளில் பெட்ரோல், டீசலுடன் தண்ணீர் கலந்துள்ளதா என்பதை சோதித்து பார்க்க வேண்டியிருக்கிறது.. ஒருவேளை, தண்ணீருடன் பெட்ரோல் கலந்து இருந்திருந்தால், அதை விற்கக்கூடாது. அதனால்தான், அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் பெட்ரோல், டீசல் தரம் பார்த்து விற்கப்படுகிறது.. இதனால்தான் சற்று காலதாமதம் ஏற்படுகிறது" என்கிறார்.
அதுமட்டுமல்ல, மழை, வெள்ளம் காரணமாக சில இடங்களுக்கு லாரிகளை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஓரிரு தினங்களில் இந்த நிலைமை சீராகிவிடும் என்றும் சொல்கிறார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications