நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் மீண்டும் விசாரணை.. ராம்குமாரை சுற்றிய மர்ம முடிச்சுகள் உடையுமா?
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் தற்கொலை தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருப்பதன் மூலம் மீண்டும் இவ்வழக்கு உயிர் பெற்றுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் சாப்ட்வேர் பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பான ப்ளாஷ் செய்திகள் டிவிகளில் ஓடிக் கொண்டிருக்கும் போதே, ஒய்ஜி மகேந்திரன் போன்ற சிலர், பிலால் என்பவர் பெயரைக் குறிப்பிட்டு அவர்தான் கொலையாளி என சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

அடேங்கப்பா யூகங்கள்
எந்த ஒரு கொலை சம்பவத்திலும் இல்லாத வகையில் சுவாதி படுகொலை -ஆணவக் கொலை; லவ் ஜிகாத் என ஏகப்பட்ட யூகங்கள் அடித்து விடப்பட்டிருந்தன. பிலால் தொடங்கி இத்தகைய யூகங்கள் ஏன் கிளம்பின என்கிற வினாக்களுக்கு விடை கிடைக்காத சூழ்நிலையில்தான் அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழ்ந்தன.

ராம்குமாரும் சுவாதி படுகொலையும்
சுவாதி படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி ராம்குமார் நெல்லையில் பிடிபட்டார்; ராம்குமார் போலீசார் சுற்றி வளைப்பின் போது கழுத்தை அறுத்தை தற்கொலை செய்ய முயன்றார் என பகீர் செய்திகள் வந்தன. இன்னொரு பக்கம், ராம்குமாருக்கும் இந்த கொலைக்குமே தொடர்பே இல்லை என்கிற குரல்களும் வலுத்து வந்தன.

ராம்குமார் தற்கொலை
ஆனால் கைது செய்யப்பட்ட ராம்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இத்துடன் சுவாதி வழக்கின் வேகம் ஒருவித முடிவுக்கு வந்ததாக கருதப்பட்ட நிலையில் சிறையில் மின்சார ஒயரைக் கடித்துக் கொண்டு ராம்குமார் தற்கொலையும் செய்து கொண்டார் என அறிவிக்கப்பட்டு வழக்கு முடிந்து போனதாகிவிட்டது.

மீண்டும் விசாரணை- அதிரடி உத்தரவு
இருந்தபோதும் சுவாதி கொலையில் என் மகனுக்கு தொடர்பு இல்லை; வேண்டும் என்றே என் மகனை கொலையில் சிக்க வைத்து சாகடித்துவிட்டனர் என்ற ராம்குமாரின் தாயாரின் குமுறல் ஓயவில்லை. அவர் மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட்டார். தற்போது, ராம்குமார் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ராம்குமார் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது மனித உரிமைகள் ஆணையம். இந்த உத்தரவால் சுவாதி படுகொலை வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ளது. சுவாதி படுகொலை தொடர்பாக விலகாத மர்ம முடிச்சுகள் இனியேனும் வெளிவருமா? உண்மை குற்றவாளி ராம்குமார்தானா? அல்லது சோ கால்ட் பரப்பிவிட்ட பிலால் போன்றவர்கள் உண்மை குற்றவாளிகளா? என்பதெல்லாம் இனி அம்பலத்துக்கு வரும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications