ஒரே நாளில் வெள்ளிக் கட்டிகள் விற்றுத் தீர்ந்த அதிசயம்! வெள்ளி விலை திடீர் உயர்வுக்கு காரணமே வேற! அட
சென்னை: வெள்ளி விலை (Silver Rate) அதிகரித்துக்கொண்டே வருவதால் நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கத்தைவிட வெள்ளி கட்டிகள் மற்றும் வெள்ளி நகைகளை வாங்க ஆா்வம் காட்ட துவங்கியிருக்கிறார்களாம். அதுமட்டுமல்ல வெள்ளி ETF-களில் முதலீடு செய்யவும் முந்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் வெள்ளிக்கட்டிகள் முழுவதுமே விற்றுத்தீர்ந்த அதிசயமும் நடந்துள்ளது,. வெள்ளி விலை உயர்வுக்கு என்ன காரணம்? என்ன நடந்தது?
தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது., ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரேட்டில் தங்கம் உயருகிறது. அதிலும் கடந்த வாரம் ஒதே நாளில் 2 முறை தங்கம்விலை உயர்ந்த வரலாற்று சம்பவமும் நடந்தது. காலை, மாலை என இரண்டு வேளையும் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருவது பலருக்கும் வியப்பையும், கலக்கத்தையும் தந்து வருகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்களால் தங்கத்தை நினைத்து கூட பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது,

வெள்ளிக்கு கிராக்கி
தங்கத்திற்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டு வெள்ளி விலையும் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.. நேற்று முன்தினம் காலை, மாலை என இரண்டு வேளையும் பவுனுக்கு ரூ.1280 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 92 ஆயிரத்தை எட்டியது. இதுபோலவே வெள்ளி விலையும் காலை, மாலை என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ஒரு கிராம் ரூ.190க்கும், கிலோவுக்கு ரூ.6 ஆயிரம் உயர்ந்தது.. பார் வெள்ளி 1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
வெள்ளி விலை
அதாவது இந்த 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.30,000 அதிகரித்துள்ளதாம், கடந்த 4 நாட்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20 ஆயிரமும் உயர்ந்துள்ளது, இது வெள்ளியில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபத்தையும், அதன்மூலம் மகிழ்ச்சியையும் தந்துள்ளது,
நேற்று அதாவது அக்டோபர் 12ம் தேதி ஒரு கிராம் ரூ.187க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. திடீரென வெள்ளிக்கு மவுசு உயர காரணம், தங்கத்தைப் போலவே, வெள்ளியும் கடினமான காலங்களில் நிதிப்பாதுகாப்பை வழங்குவதை வாடிக்கையாளர்கள் வரவேற்கிறார்கள்.. இந்த திடீர் வெள்ளி விலை உயர்வுக்கு, இது பண்டிகை காலம் என்பதும் முக்கிய காரணமாகும்..
வெள்ளிக்கட்டிகள்
அதேபோல தொழில் துறையிலும் வெள்ளியின் தேவை பெருகியிருக்கிறதாம்,. உலகளவில் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தொழிற்சாலை பயன்பாட்டுக்காக வெள்ளியை அதிகளவில் கொள்முதல் செய்து வருகின்றன.
இவைகளில் சோலார் மின்தகடு, லித்தியம் பேட்டரி, எலக்ட்ரிக் வாகனங்கள், எலக்ட்ரிக் கம்பிகள், செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், ஏஐ தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவைகளில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்திருப்பதால், வெள்ளிக்கான தேவையும் உயர்ந்து, அதன்மூலம் விலையும் உயர்ந்து விடுகிறதாம்,
சிறு முதலீட்டாளர்கள்
அதுமட்டுமல்ல, இதுவரை வெள்ளியில் முதலீடு செய்யாதவர்களும், இனி அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்ட துவங்கியிருக்கிறார்களாம். அதேபோல சிறு முதலீட்டாளர்களும் கையிருப்பில் தங்கத்தை வாங்கி வைத்து கொள்கிறார்களாம்.
இதனால் தமிழகம் முழுவதும் வெள்ளி கட்டிகள் விற்று தீர்ந்துள்ளதாக நகை வியாபாரிகள் கூறியிருக்கிறார்கள். சென்னை மற்றும் பிறமாவட்டங்களை சார்ந்த நகைக்கடைகள், வியாபாரிகளிடம் வெள்ளி கட்டிகள் இருப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது..
விற்பனை அதிகரிப்பு
மேலும், வெள்ளி கட்டி வாங்க முன்கூட்டியே புக்கிங் செய்தாலும் உடனே கிடைப்பதில்லையாம், 10, 15 நாட்களுக்கு காத்திருக்க வேண்டியிருப்பதாக நகை வியாபாரிகள் கூறுகிறார்கள். இதனால் வெள்ளிக்கு தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.
ஆனால், வெள்ளி கட்டி வாங்க முன்பதிவு செய்து இருந்தாலும் விற்பனை செய்யப்படும் அன்று என்ன விலைக்கு விற்கிறதோ அந்த விலைக்கு தான் வெள்ளி விற்பனை செய்யப்படும் என்று நகை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது,
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications