பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர்.. ஜூலை 15இல் 100ஆவது பிறந்த நாளை கொண்டாடும் தோழர் சங்கரய்யா
சென்னை: சுதந்திரப் போராட்ட தியாகியான என். சங்கரய்யாவின் 100ஆவது பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அவரை வாழ்த்த கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சென்னை வரவுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான என். சங்கரய்யாவின் 100ஆவது பிறந்தநாள் ஜூலை 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ள தோழர் சங்கரய்யா, இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது, இருந்த 36 தலைவர்களில் இவரும் ஒருவர். இவர் 1995ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகவும் இருந்துள்ளார்.
இவரது பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தோழர் என். சங்கரய்யா 100வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூலை 15ஆம் தேதி தோழர் என். சங்கரய்யா 100வது பிறந்தநாளையொட்டி கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நேரில் வாழ்த்துவதற்காக வருகை தருகிறார். அவருடன் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்களும் தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள்.
தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் / பிரமுகர்கள் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை வாழ்த்து தெரிவிக்க உள்ளார்கள். ஏற்கனவே அறிவித்துள்ள படி, கட்சி தோழர்களும், ஆதரவாளர்களும் ஆங்காங்கே தோழர் சங்கரய்யாவின் 100வது பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென்றும், நேரடியாக வருவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்" என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications