'அன்னவர்க்கே சரண்'..புதிய டிஜிபி சைலேந்திரபாபு நியமனம்- சிவகங்கை எஸ்.பி. செந்தில்குமார் நெகிழ்ச்சி
சென்னை: தமிழக புதிய டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு நியமனம் குறித்து ஃபேஸ்புக்கில் நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளார் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார். இளைய சமுதாயம் அறிவிலும், திறமையிலும், ஒழுக்கத்திலும் மேம்பட்டு இருக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை கொண்ட சமூக சேவகர் டிஜிபி சைலேந்திரபாபு என தெரிவித்துள்ளார் எஸ்.பி. செந்தில்குமார்.
Recommended Video
தமிழக புதிய டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு இன்று பதவியேற்கிறார். சைலேந்திரபாபுவின் நியமனம் பலராலும் பாராட்டப்படுகிறது.
சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யான செந்தில்குமார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் டிஜிபி சைலேந்திரபாபு குறித்து எழுதியுள்ளதாவது:
..

மிக சிறந்த காவல்துறை அதிகாரி
சொல்லும் செயலும் ஒன்று என வாழும் மிகச் சிறந்த காவல் அதிகாரி. எந்த நிலையிலும் தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத உறுதிமிக்க தலைவர் ! எந்த பணியிலும் தன்னுடைய தனித்துவத்தை முத்திரை பதிக்கும் அற்புதமான நிர்வாகி! மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை செயலில் நிகழ்த்திக் காட்டும் மாமனிதர்!

இளைய சமூகம் மீது அக்கறை
இளைய சமுதாயம் அறிவிலும், திறமையிலும், ஒழுக்கத்திலும் மேம்பட்டு இருக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை கொண்ட சமூக சேவகர்!! அவரின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் ஒன்றரை ஆண்டுகாலம் ரயில்வே எஸ்பியாக பணிபுரிந்தது வாழ்வின் உன்னதமான தருணமாகும்.. ரயில்வேயில் அனைத்து மனுக்களையும் ஏற்று கொண்டு FIR பதிவு செய்யும் முறையை கொண்டு வந்தார். பயணிகளின் பயணம் தடைபடாமல், காவலர்கள், அவர்களுடனே பயணித்து புகார் மனுவை பெற்றுக்கொள்ள செய்தார்.

மனிதாபிமானம் மிக்கவர்
தெளிவான ஆலோசனைகள், உறுதியான முடிவு, மனம்விட்டு பாராட்டும் மாண்பு! மனிதாபிமானம் மிக்க, பொது மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகள்! என தரமான அறிவுரைகளை வழங்கி வழி நடத்தும் அற்புதமான தலைவர்!!

காவல்துறையை எழுச்சி பெற செய்யும்
உறுதிமிக்க உடல்திறன், பரந்துபட்ட வாசிப்பு, திறமையான நிர்வாகம், கடுமையான உழைப்பு, அரவணைத்து செல்லும் பாங்கு, பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் தலைமை என சிறந்த மேலாண்மை குணங்களை கொண்ட எங்கள் அன்பிற்குரிய சைலேந்திரபாபு சார், காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்நாடு காவல் துறையையே எழுச்சி பெற செய்யக்கூடிய நல்ல தருணம் ஆகும்..

மேய்ப்பன் வழி மந்தை வழி
அவருடைய மகத்தான மக்கள் காவல் பணி சிறந்திட வாழ்த்துக்களும், அவருக்கு இந்த பொறுப்பை வழங்கிய தமிழக அரசுக்கு மனம் நிறைந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.. மேய்ப்பன் எவ்வழியோ, மந்தை அவ்வழி!!
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications