முழுசா வீடியோவை பார்த்துட்டு வாங்க.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் வழக்கறிஞரிடம் நீதிபதி காட்டம்!
சென்னை: குஷ்பூ பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையில், நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஜூன் 16ஆம் தேதி கொடுங்கையூரில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கூட்டத்தினரை கவர்வதற்காக நகைச்சுவையுடன் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், யாரையும் குறிப்பிட்டு தவறாக பேசவில்லை எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோவை தான் பார்த்ததாக கூறிய நீதிபதி, அதை முழுமையாக பார்த்துவிட்டு வரும்படி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.
மனுதாரர் 65 வயதான மூத்த குடிமகன் என்பதால் அவருடைய வயதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒரு மூத்த குடிமகன் இவ்வாறு பேசலாமா என்றும், மூத்த குடிமகன் போல் அவர் நடந்து கொள்ளவில்லையே என்றும் கூறி, வழக்கின் விசாரணையை நாளை மறு நாளுக்கு ஜூன் 30ஆம் தேதி) நீதிபதி தள்ளிவைத்தார்.
-
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications