சிவகார்த்திகேயனின் ‛பராசக்தி' படத்துக்கும் சென்சார் சான்று கிடைக்கவில்லை.. படம் வெளியாவது சிக்கல்
சென்னை: நடிகர் விஜயின் ‛ஜனநாயகன்' திரைப்படத்துக்கு இன்னும் சென்சார் சான்று கிடைக்கவில்லை. இதனால் ஜனவரி 9 ம் தேதி வெளியாக இருந்த திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள ‛பராசக்தி' திரைப்படத்துக்கும் இன்னும் சென்சார் சான்று கிடைக்கவில்லை. இதனால் அந்த திரைப்படமும் சிக்கலை சந்தித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி உள்ள திரைப்படம் ‛பராசக்தி'. பொங்கல் பண்டிகையையொட்டி இந்த திரைப்படம் ஜனவரி 10ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த திரைப்படத்தில் ரவி மோகன், அதர்வா, நடிகை ஸ்ரீலீலா உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி உள்ளார்.

தமிழகத்தில் 1964ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் மறைந்த முதல்வர் அண்ணா கதாபாத்திரத்தில் நடிகர் சேத்தன் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் ஜனவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியின் ‛ரெட் ஜெயண்ட்' நிறுவனம் வெளியிடுகிறது.
தமிழகத்தில் முதல் முறையாக திமுக ஆட்சியை பிடிக்க இந்தி எதிர்ப்பு போராட்டம் பெரிய அளவில் கைகொடுத்தது. இப்போது தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்த திரைப்படம் வெளியாவது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தான் ‛பராசக்தி' திரைப்படத்துக்கு சென்சார் சான்று கிடைக்காமல் உள்ளது. பராசக்தி திரைப்படம் சென்சார் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்சார் குழு திரைப்படத்தை பார்த்தனர். அதன்பிறகு திரைப்படம் மறு ஆய்வு கமிட்டிக்கு அனுப்பி வைக்க்பபட்டது. படத்தை பார்த்த மறுஆய்வு கமிட்டி ‛பராசக்தி' திரைப்படத்துக்கு யூ/ஏ சான்று வழங்க ஒப்புதல் வழங்கியதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது வரை ‛பராசக்தி' படக்குழுவுக்கு சென்சார் சான்று கிடைக்கவில்லை. இருப்பினும் நாளைக்குள் சென்சார் சான்று கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ‛பராசக்தி' திரைப்பட குழுவினர் புரோமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான ‛ஜனநாயகன்' ஜனவரி 9ம் தேதி தியேட்டரில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த படத்துக்கும் சென்சார் சான்று கிடைக்கவில்லை. மேலும் சென்சார் சான்று வழங்க கோரி படக்குழு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஜனவரி 9 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
இப்படி சென்சார் சான்று பிரச்சனையால் ‛ஜனநாயகன்' திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி ஜனவரி 9 ம் தேதி ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாது என்று பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படியான சூழலில் தான் சிவகார்த்திகேயனின் ‛பராசக்தி' திரைப்படத்துக்கும் சென்சார் சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ‛ஜனநாயகன்' திரைப்படமும் ஜனவரி 10ம் தேதி ரிலீசாகுமா? என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications