தூக்கத்தைத் தொலைத்த திமுக புள்ளி? பிரேமலதா என்ன இப்படி சொல்லிட்டாங்களே? இப்பவே கூட்டணி கண்ணை கட்டுதே
சென்னை: தமிழக அரசியல் களம் அடுத்த சட்டமன்றத் தேர்தலை நோக்கி இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.. குறிப்பாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தான் வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அவர் எந்தத் தொகுதியைத் தேர்வு செய்வார் என்பதே அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது..
தேமுதிக கடந்த சில நாட்களாகவே தன்னுடைய கூட்டணியை அறிவிக்காமல் இருந்தது.. ஒருவேளை அந்த கட்சி திமுகவுக்கு வந்தால், சில தொகுதிகள் சென்டிமென்ட் அடிப்படையில் கேட்கப்படும் என்பது திமுகவுக்கு பெரிய தலைவலியாக அப்போதே உருமாற துவங்கிவிட்டது..

விஜயகாந்த் அரசியல்
அதாவது விருத்தாசலம், ரிஷிவந்தியம் - இந்த 2 தொகுதிகளும் விஜயகாந்தின் அரசியல் வரலாற்றோடு நேரடியாக இணைந்தவை என்பதால், தேமுதிக திமுக கூட்டணிக்கு வந்தால், இந்த இரண்டில் ஒன்றையாவது, அல்லது இரண்டையும் கேட்கும் வாய்ப்பு அதிகம் என்பதால், திமுக கூட்டணிக்குள்ளேயே பதற்றத்தை லேசாக ஏற்பட துவங்கியது..
ஏனென்றால், விருத்தாசலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், ரிஷிவந்தியத்தில் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் இருவருமே, சீட்டுக்காக காத்திருக்கிறார்களாம்..
ரிஷிவந்தியம் தொகுதி
கடந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி, கடுமையான உழைப்பு மற்றும் வலுவான உள்ளூர் ஆதரவு என அனைத்தும் ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தின் தற்போதைய கூட்டணி அரசியல் என்பது ஒரு சிறிய கையொப்பத்தின் மூலம் ஒட்டுமொத்த தொகுதியையே மாற்றியமைத்துவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக, தேமுதிக எடுக்கப்போகும் அந்த இறுதி முடிவு என்பது வெறும் ஒரு கட்சியின் இடங்களை மட்டும் தீர்மானிக்க போவதில்லை. மாறாக முக்கிய கட்சிகளின் உட்சிக்கலை முற்றிலுமாகக் குலைக்கும் ஒரு சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
பிரேமலதா போட்டியிட முடிவு
எதிர்பார்த்தபடியே திமுக கூட்டணிக்குள் தேமுதிக வந்துள்ளது.. மறைந்த கேப்டன் விஜயகாந்த் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா களமிறங்கக்கூடும் என்ற தகவல் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.. இந்தத் தகவல் தேமுதிக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அதே தொகுதியைத் தன் கோட்டையாகக் கருதும் திமுகவினரிடையே கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது..
தற்போதைய சூழலில் ரிஷிவந்தியம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக திமுகவின் வசந்தம் கார்த்திகேயன் பதவி வகித்து வருகிறார்.. கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளராகவும் செல்வாக்குடன் விளங்கும் அவர், கடந்த 2 தேர்தல்களில் அத்தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்தவர்.. பிரேமலதா அத்தொகுதியில் போட்டியிட விரும்பினால், கூட்டணி கணக்குகளின் அடிப்படையில் அத்தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்படலாம் என்ற அச்சம் வசந்தம் கார்த்திகேயன் தரப்பை உலுக்கியுள்ளது..
தேமுதிக - திமுக
ஒருவேளை தொகுதி கைமாறினால் தன்னால் மீண்டும் அங்கு போட்டியிட முடியாது என்பதால், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது..
இந்த அரசியல் மாற்றங்களால் வசந்தம் கார்த்திகேயன் கடும் வருத்தத்தில் இருப்பதாகவும், அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இப்போதே கலக்கமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன..
தொகுதியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டி, அதனைச் செயல்படுத்த பெருமளவு உழைப்பையும் நிதியையும் அவர் செலவிட்டுள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் தொகுதி பறிபோகும் நிலை உருவாவது அவருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.. இதனால் தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும், இந்தச் சூழலை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் தனது தீவிர ஆதரவாளர்களுடன் அவர் அவசர ஆலோசனையில் இறங்கியுள்ளார்..
திமுக கூட்டணி சலசல
ரிஷிவந்தியம் தொகுதி நீண்ட காலமாகவே திமுகவுக்கு சாதகமான தொகுதியாக இருந்து வருகிறது.. கடந்த 2 முறையும் உதயசூரியன் சின்னத்தில் மக்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளதால், இப்போதும் வெற்றி வாய்ப்பு தங்களுக்குத்தான் பிரகாசமாக இருப்பதாக திமுகவினர் நம்புகின்றனர்..
இத்தகைய சூழலில், கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரேமலதாவுக்கு இந்தத் தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அது மாவட்டத்தில் திமுகவின் வலுவைச் சிதைத்துவிடும் என நிர்வாகிகள் அஞ்சுகின்றனர்.. பிரேமலதாவின் வருகையால் ரிஷிவந்தியத்தில் ஆரம்பித்துள்ள இந்தத் தொகுதிப் பிரச்சனை, வரவிருக்கும் நாட்களில் திமுக - தேமுதிக உறவில் எந்த மாதிரியான திருப்பங்களை ஏற்படுத்தும் என்பதே அரசியல் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications