ஸ்மார்ட் சிட்டி திட்டமே மழைநீர் தேங்குவதற்கு முக்கிய காரணம் - தி.நகர் பொதுமக்கள் குற்றச்சாட்டு
சென்னை : சென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் பகுதியில் கனமழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளது என்றும் வீடுகளில் மழைநீர் புகுந்து உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு முழுக்க விடிய விடிய மழை பெய்தது.
சென்னையில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை விடாமல் இப்போது வரை பெய்து கொண்டு இருக்கிறது. இரவு முழுக்க மழை பெய்த காரணத்தால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை காரணமாக அதிக வெள்ளம் ஏற்பட்ட, தி நகர், வேளச்சேரி பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வேளச்சேரி
சென்னையில் வேளச்சேரி, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. . ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர் விட்டு விட்டு மழை பெய்தது.

தியாகராய நகரில்
இந்த மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக தியாகராய நகரில் கடந்த கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையில் மழைநீர் இவ்வளவு தேங்க வில்லை. ஆனால் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அனைத்து பகுதிகளையும் நாசமாக்கியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பாண்டிபஜார்
சென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் பகுதியில் கனமழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளது என்றும் வீடுகளில் மழைநீர் புகுந்து உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
1000 வீடுகள் உள்ள இந்த பகுதியில் ஸ்மார்ட் சிட்டி மூலம் மழை நீர் செல்லும் வடிகால் பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மழை நீர் ஆங்காங்கே தேங்கி குளம் போல் உள்ளது. மேலும் இந்தப் பகுதியில் மழைநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அப்பகுதி மக்களே சீரமைத்து வருகின்றனர்.

திருமலை நகர்
சென்னையில் தியாகராயநகர் மட்டுமல்ல , வேளச்சேரி , தாம்பரம், திருமலை நகர் வட சென்னையின் சில பகுதிகளில் பெரும்பாலான சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தில் இருந்து மக்களை காக்க அரசு விரைந்து நடவடிக்கை எ, டுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். விட்டு விட்டு பெய்து வரும் மழைக்கு நடுவே மீட்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications