சோப், பிஸ்கட் எடை குறைவு.. ஆனால் அதேவிலை... வலி தாங்க சக்தி கொடு...ஆனந்த் ஸ்ரீனிவாசன் வருத்தம்
சென்னை: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில் சோப், பிஸ்கட்டில் விலையை உயர்த்தாமல் எடையை குறைத்து அதே விலைக்கு விக்கிறாங்க. இந்த வலியை தாங்க சக்தி கொடு என பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன். பொருளாதார நிபுணரான இவர் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
மேலும் பொருளாதாரம், முதலீடுகள் குறித்து தொடர்ந்து பேசி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

பொருளாதார நெருக்கடி
மேலும் இந்தியாவின் நிதிநிலைமை, பணவீக்கம் மோசமான நிலையில் இருப்பதாக அவர் கூறி வருகிறார். சமீபத்தில் கூட இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை குறிப்பிட்டு இந்தியாவுக்கு எச்சரிக்கை செய்தார். அதாவது மத உணர்வுகளை தூண்டும் இலங்கை அரசின் கொள்கை தான் அந்நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தெரிவித்து இருந்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு அவர் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

அதிகரிக்கும் விலையேற்றம்
இந்நிலையில் தற்போது இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இதன்மூலம் ஓட்டல் உணவு, டீ, காபியின் விலைகள் அதிகரித்துள்ளன. வாகனங்களின் வாடகை கட்டணங்களும் சில இடங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. சில இடங்களில் விரைவில் விலை உயர்வு அமலுக்கு வர உள்ளது. மேலும் ஆட்டோ, வாடகை கார், ஸ்கூட்டர்களின் கட்டணமும் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

எடைகளை குறைப்பதாக புகார்
இதற்கிடையே தான் பெட்ரோல், டீசல், மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை சில நிறுவனங்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால் தாங்கள் தயாரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கு பதில் அதன் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

சோப், பிஸ்கட் எடை குறைவு
சோப் ஒன்றின் பெயரை குறிப்பிட்டு ரூ.10க்கு விற்ற 150 கிராம் எடை கொண்ட சோப் தற்போது 130 கிராமாக எடை குறைக்கப்பட்டு அதே விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛சோப்பின் 150 கிராம் விலை 10 ரூபாயாக இருந்தது. தற்போது 130 கிராம் சோப் 10 ரூபாய் என ஆகிவிட்டது. விலையை கூட்டுவதற்க பதில் எடையை குறைக்குறாங்க. பிஸ்கட் பாக்கெட்டும் அப்படித்தான். ஆனா சக்தி காந்த தாஸ் வேற மாதிரி சொல்றாரே! வலியை தாங்குவதற்கு சக்தி கொடு'' என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் மத்திய அரசை மறைமுகமாக தாக்கி பேசிய ஆனந்த் ஸ்ரீனிவாஸ் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸை நேரடியாக விமர்சனம் செய்துள்ளார்.
-
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
ஹசீனா சையத் கீழ்த்தரமான குணத்தை காட்டிட்டாங்க! காங்கிரஸ் மகளிர் அணி தலைவி அட்டாக்!












Click it and Unblock the Notifications