மீண்டும் போட்டியிட மறுத்த மத்திய சென்னை நாம் தமிழர் வேட்பாளர்- "மிரட்டி" நிற்க வைத்த சீமான்!
சென்னை: லோக்சபா தேர்தலில் மத்திய சென்னை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் கார்த்திகேயன் மீண்டும் போட்டியிட மறுத்ததாகவும் தாம் மிரட்டித்தான் அவரை வேட்பாளராக நிறுத்தி இருப்பதாகவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் களம் தொடர்பாக ஓராண்டுக்கு முன்னர் இருந்தே பேசி வருபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது பேசிய சீமான், 2024 தேர்தலில் தலைநகர் சென்னையில் 3 பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். ஒருத்தி மத்திய சென்னையில் என் பாத்திமா நிப்பா.. வட சென்னையில் என் தங்கச்சி இளவஞ்சி நிப்பா.. தென் சென்னையில் என் தங்கச்சி நாச்சியாள் சுகந்தி நிப்பா. தலைநகரில் 3 பெண்கள் போட்டி. இதுதான் நடக்கும் என அறிவித்திருந்தார்.

ஆனால் தற்போது இந்த 3 பேருமே வேட்பாளர்களாக அறிவிக்கப்படவில்லை. தென்சென்னை தொகுதி வேட்பாளராக சீமான் முன்னிறுத்திய நாச்சியாள் சுகந்தி தற்போது அதிமுகவில் இணைந்துவிட்டார். தென் சென்னை லோக்சபா தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக முனைவர் தமிழ்ச்செல்வி, வடசென்னை வேட்பாளராக டாக்டர் அமுதினி, மத்திய சென்னை வேட்பாளராக டாக்டர் கார்த்திகேயன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மத்திய சென்னை வேட்பாளர் டாக்டர் கார்த்திகேயனை அறிமுகப்படுத்தும் போது சீமான் பேசிய பேச்சு தற்போது பேசு பொருளாகி இருக்கிறது. சீமான் தமது அறிமுக உரையில், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி என்னுடைய தம்பி, முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர், கடந்த முறையும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இம்முறையும் வாய்ப்பு கொடுக்கிறேன். அவன் நிற்க மறுத்தான். மருத்துவமனை கட்டிக் கொண்டு இருக்கிறேன் என்றான். அதனால் என்னால் நிற்க முடியாது என்றான். நீ ஆக்கிரமித்த இடத்தில் மருத்துவமனை கட்டிக் கொண்டிருக்கிறாய் என முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவேன் என்ற உடன் அண்ணன் செஞ்சாலும் செய்வார் என பயந்து கொண்டு வேட்பாளராகி நிற்கிறான். திறம்படச் செயல்படுவான். பெரிய அறிஞன். தர்க்க அறிவு கொண்டவன் என்றார்.

லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்த ஒருவரை வேட்பாளராக வலுக்கட்டாயமாக தாம் மிரட்டி நிற்க வைத்ததாக சீமான் பொதுமேடையில் அறிவித்தது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட டாக்டர் கார்த்திகேயன் 30,886 (3.93%) வாக்குகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications