விபத்து ரயிலில் வந்த தமிழக ராணுவ வீரர்.. பெட்டியில் 72 பேர்.. ஒரே ஆள்.. சல்யூட் அடிக்கும் பயணிகள்!
சென்னை : கொல்கத்தா ஷாலிமர் - சென்னை செண்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கிய நிலையில், அதில் பயணித்த ராணுவ வீரர்கள் பலர், மீட்பு பணிகளில் ஈடுபட்டதோடு பல பயணிகளை காப்பாற்றியுள்ளனர். உயிர் தப்பிய பலரும், ராணுவ வீரர்கள் செய்த உதவியைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளனர்.
கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் சுமார் 280 பேர் உயிரிழந்திருப்பதோடு, காயமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரயிலில் இருந்த பலரை, ரயிலில் பயணித்த ராணுவ வீரர்கள் காப்பாற்றியதாக விபத்தில் உயிர் தப்பிய பயணிகள் தெரிவித்துள்ளனர். உயிர் தப்பிய விக்னேஷ் என்ற பயணி, சென்னைக்கு விடுமுறைக்குச் செல்லும் ராணுவ வீரர்கள் இந்த ரயிலில் பயணித்தனர். அவர்கள் கடவுள் போல பெட்டிக்குள் சிக்கிக்கொண்ட பலரையும் மீட்டனர். பலருக்கு முதலுதவிகளையும் செய்தனர்" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
அதேபோல, ஹரீஷ் என்ற பயணி, தாங்கள் இருந்த பெட்டியில் பயணித்த ராணுவ வீரர் ஒருவர் பெரிய அளவில் அனைவருக்கும் உதவி செய்ததாக நன்றி தெரிவித்துள்ளார். தங்கள் பெட்டிக்கு அருகே இருந்த பெட்டி முழுவதுமாக உருக்குலைந்து விட்டதாகவும், காலுக்கடியில் மூன்று சடலங்கள் கிடந்தது என்றும் தெரிவித்துள்ளார் அவர்.
சேலத்தைச் சேர்ந்த ஒரு பயணி கூறுகையில், நான் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தேன். திடீரென சத்தம் கேட்டது. கீழே விழுந்துவிட்டேன். இறங்கி பார்த்தபோது கடுமையான அதிர்ச்சியாக இருந்தது. கண் முன்னாடியே இறந்த உடல்களை சுமந்து சென்றனர். எங்களால் அதிர்ச்சியில் இருந்த மீள முடியவில்லை. ராணுவ வீரர் ஒருவர் எங்கள் கோச்சில் உள்ளவர்களை முடிந்தளவு காப்பாற்றினார் எனத் தெரிவித்தார்.
எல்லைப் பாதுகாப்பு படை வீரரான கனகராஜ் கூறுகையில், "எங்கள் பெட்டியில் 72 பேர் வந்தனர். ரயில் பாதி கவிழ்ந்து போய் நின்ற நிலையில், ஒரே பக்கம் எல்லோரும் சென்றால் பெட்டி கவிழ வாய்ப்புள்ளது என்பதால் ஒவ்வொருவராக மெதுவாக பேலன்ஸ் செய்து வெளியே கொண்டு வந்தோம். எல்லோரும் இறங்கிய பிறகு,குழந்தைகள் யாரும் உள்ளே இருக்கிறார்களா என நன்றாகத் தேடிப் பார்த்துவிட்டு கடைசியாக நான் வந்தேன்" என்று கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications