சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தின் பழமையான கோவில்கள் இனி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்.. மத்திய அரசு புது திட்டம்!

தமிழகத்தில் பழமையான கோவில்கள் சிலவற்றை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பழமையான கோவில்கள் சிலவற்றை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

இந்தியாவில் இருக்கும் பழைய கட்டிடங்கள், புராதான சின்னங்கள் ஆகியவற்றை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது வழக்கம். அந்த பகுதிகளை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. தமிழகத்தில் இப்படி பல பகுதிகள் உள்ளது .

தமிழகத்தில் மொத்தம் தொல்லியல் துறை வசம் 100+ இடங்கள் உள்ளது. நிறைய புராதன கட்டிடங்கள், பழங்கால ஆங்கிலேயர் கால இடங்கள், நினைவுச் சின்னங்கள் இருக்கிறது.

பாஜகவின் கோலி மாரோ.. துரோகிகளை சுட்டுக் கொல்லுங்க கோஷம்.. லாடம் கட்டுவதில் மமதாஜி மும்முரம்!பாஜகவின் கோலி மாரோ.. துரோகிகளை சுட்டுக் கொல்லுங்க கோஷம்.. லாடம் கட்டுவதில் மமதாஜி மும்முரம்!

என்ன சின்னம்

என்ன சின்னம்

இந்த நிலையில் நாடு முழுக்க பல்வேறு புராதான சின்னங்களை தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய மத்திய அரசு சார்பாக 3,691 புராதனச் சின்னங்கள் தொல்லியல் துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக தாஜ்மஹால், குதுப்மினார் போன்ற வரலாறு சிறப்பு மிக்க கட்டிடங்கள் இந்த பட்டியலில் உள்ளது. சென்னை மாமல்லபுரமும் இதன் கீழ்தான் வருகிறது.

உத்தர பிரதேசம் எப்படி

உத்தர பிரதேசம் எப்படி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 745 இடங்கள் இந்திய தொல்லியல் அமைப்பின் கீழ் உள்ளன. இந்தியாவில் சில கோவில்கள் தொல்லியல் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கோவில்கள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை. மாறாக புதிய திட்டம் மூலம் இந்த கோவில்களை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். மத்திய அரசின் இந்த முடிவுதான் கேள்விகளை எழுப்பி உள்ளது.

இந்துக்கள்

இந்துக்கள்

இதனால் தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இயங்கும் கோவில்கள் பல மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் செல்ல வாய்ப்புள்ளது. பழமையான கோவில்கள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு செல்லும். நாடு முழுக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுதான் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பலர் இந்த முடிவை எதிர்க்க தொடங்கி உள்ளனர்.

பட்டேல்

பட்டேல்

கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் இந்த திட்டம் எப்போது செயலுக்கு வரும் என்று விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் எந்த கோவில்கள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்லும் என்று வரையறை இன்னும் விதிக்கப்படவில்லை. அதே சமயம் இன்னொரு பக்கம் மத்திய தொல்லியல் துறை சில முக்கியமான இடங்களை மாநில தொல்லியல் துறைக்கு கொடுக்க வாய்ப்புள்ளது.

English summary
Some old temples in Tamilnadu may get into Center's Archeological department control soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X