• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

செம ட்விஸ்ட்.. ஓவியாவுக்கு வலை வீசும் "மெகா" கட்சி.. பாஜகவுக்கு செக்.. அதிமுகவுக்கும் ஷாக்!

|

சென்னை: ஓவியாவின் பெயர் தமிழக அரசியலில் அடிபட ஆரம்பித்துள்ளது.. வழக்கமாக நடிகர், நடிகைகள் அரசியலில் நுழைவதும், பதவி வகிப்பதும் இயல்பான ஒன்று என்றாலும், ஓவியா விஷயத்தில் மட்டும் சகஜமாக எடுத்து கொண்டு நகர்ந்து முடியவில்லை.. அதற்கு காரணம் பாஜக!

  Oviya-வுக்கு வலை வீசும் மெகா கட்சி.. பாஜகவுக்கு செக்..| Oneindia Tamil

  டெல்லியில் இருந்து பிரதமர் எப்போது தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வழக்கம்போல் ஃபேமஸ் ஆவது "கோ பேக் மோடி"தான்.. இதற்கு மாற்றாக பாஜக, எத்தனையோ ஹேஷ்டேக்கை உருவாக்கினாலும், இந்த கோ பேக் மோடிக்கு நிகராக வேறு எதுவுமே இதுவரை ட்ரெண்ட் ஆனது இல்லை.

  அப்படித்தான், இப்போதும் பிரதமர் வரும்போது ட்ரெண்ட் ஆனது.. ஆனால், வழக்கத்துக்கு மாறாக நடிகை ஓவியாவும் இதை பதிவிட்டிருந்தார்.. மொத்த களமும் கொந்தளித்தது..

  "53 வயசாகியும் இன்னுமா அது தெரியலை".. கண்ணகி மீது கொந்தளித்த கணவன்.. கோடாரியால் ஒரே வெட்டு..!

  ட்வீட்

  ட்வீட்

  ஓவியாவின் ட்வீட் மட்டும் வித்தியாசமாக பார்க்கப்பட்டது.. ஒரு நடிகை இவ்வளவு ஓப்பனாக 'கோ பேக் மோடி' என ட்வீட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது... அலசப்பட்டது.. விவாதத்தையும், சர்ச்சையும் கிளப்பியது.. கடைசியில் சிபிசிஐடி சைபர் பிரிவிற்கு பாஜக சார்பில் புகாரே தரப்பட்டது.. ஓவியாவை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது..

   சர்ச்சை

  சர்ச்சை

  இது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.. கோ பேக் மோடி என்றால் தேச துரோகமா? அப்படியானால், இந்த 4 வருடத்தில் எத்தனையோ முறை கோ பேக் மோடி ஹேஷ்டேக் உச்சரிக்கப்பட்டதே? பல்லாயிரக்கணக்கானோர் இதே ட்வீட்டை பதிவிட்டு எதிர்ப்பை காட்டினார்களே? அவர்கள் மீதெல்லாம் இப்படி வழக்கு பதிவு செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

   விமர்சனம்

  விமர்சனம்

  ஓவியா மீது மத ரீதியான பார்வை விழுந்து, அதனாலேயே அவரை பாஜக விமர்சிப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வருகிறது.. அதேசமயம், பிரதமருக்கு எதிர்ப்பை காட்டிய இளம்பெண் என்ற முறையில் ஓவியாவுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது..

  திமுக

  திமுக

  இந்த சமயத்தில் இன்னொரு தகவலும் வெளியாகி வருகிறது.. ஓவியாவை, திமுக தங்கள் கட்சிக்கு இழுப்பதாக சொல்லப்படுகிறது.. அதனாலேயே திமுகவில் பேச்சாளர் அல்லது வேறு ஏதேனும் ஒரு பதவி ஓவியாவிற்கு தரவும் யோசனை உள்ளதாம்.. இப்படி ஒரு யோசனையை செய்து வருவது ஐபேக் டீம் என்றும் கூறுகிறார்கள்.. இதற்காக ஓவியாவிடம் ஒரு குறிப்பிட்ட சம்பளமும் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

   பின்னணி என்ன?

  பின்னணி என்ன?

  இதன்பின்னணி என்னவென்றால், இப்போதைக்கு திமுகவில் யாரும் பேச்சாளர்கள் இல்லை.. முன்பு நிறைய பேர் இருந்தனர்.. அதிமுக அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவு நட்சத்திர பேச்சாளர்களும் திமுகவில் இருக்கவே செய்தனர்.. ஆனால், இந்த எண்ணிக்கை இப்போது இல்லை என்பதாலும் தேர்தல் நெருங்கி வருவதாலும், ஒரு பிரபலம் பேச்சாளராக தேவை இருக்கிறது.. அதுமட்டுமல்ல, ஏகப்பட்ட சினிமா பட்டாளங்களுடன் தமிழக பாஜக தற்போது உள்ளது..

  பாஜக

  பாஜக

  சில சமயங்களில், குறிப்பாக தேர்தல் நேரத்தில், அரசியல் கவர்ச்சிகள் தேவையானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருக்கிறது.. அதனால்தான், அதிமுக, பாஜகவை போலவே திமுகவும் ஒரு ஃபேமஸ் புள்ளியை பிரச்சாரத்தில் இறக்க முடிவு செய்துள்ளது.. ஓவியாவுக்கு தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு ரசிகர்கள் இருப்பதால், நிச்சயம் அவருக்கு இந்த முயற்சி கைகொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது. அது பிரதமரை எதிர்க்கும் துணிச்சல் உடைய ஓவியாவாக இருந்தால், அது மேலும் தங்களுக்கு பலம் என்று கருதுவது போலும்.. எப்படியோ ஒரு புது வரவு தமிழக அரசியலுக்குள் நுழைய போகிறது..!

   
   
   
  English summary
  Sources say that Oviya will join in DMK Soon
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X