சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு வழியாக தெளிவாகிறது அதிமுக.. தமிழ்மகன் உசேனுக்கு ராஜ்யசபா சீட் கன்பார்மாம்!

ராஜ்ய சபா உறுப்பினராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட வாய்ப்பு என கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ்மகன் உசேனுக்கு ராஜ்யசபா சீட்டுக்கு வாய்ப்பு இருக்காம் !- வீடியோ

    சென்னை: இருக்கிற ஒரு சீட்டை யாருக்குதான் தருவது என்று குழம்பி போய்.. கடைசியில் தமிழ்மகன் உசேனுக்கு வழங்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    அதிமுகவுக்கு 3 ராஜ்ய சபா சீட்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஒன்று அன்புமணிக்கு என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபடுத்தி விட்டார். மற்றொன்றை கூட்டணி கட்சியான பாஜக கேட்டு கொண்டிருப்பதாக சொல்லப்பட்டது.

    அப்படி என்றால் மீதமுள்ளது ஒரே ஒரு சீட்தான். இந்த சீட்டுக்காக கிட்டத்தட்ட 15 பேர் கொண்ட பெரிய லிஸ்ட் வந்து அதிமுக தலையில் விழுந்தது. மற்ற விவகாரங்களை போல இதிலும் ஓபிஎஸ், இபிஎஸ் என்று இரட்டை தலைமையில் வேட்பாளர்கள் பெயர்கள் பரிசீலனையில் எழுந்தன.

    குனிந்து கும்பிட்டு பதவியை பெற்றது யார்?- சட்டசபையில் முதல்வரும், செந்தில்பாலாஜியும் காரசார விவாதம் குனிந்து கும்பிட்டு பதவியை பெற்றது யார்?- சட்டசபையில் முதல்வரும், செந்தில்பாலாஜியும் காரசார விவாதம்

    நீடித்த குழப்பம்

    நீடித்த குழப்பம்

    தங்களுக்கு ஆதரவானவர்களுக்கு சீட் தருவதா, அல்லது கட்சிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதை பார்த்து சீட் தருவதா என்ற குழப்பம் இவ்வளவு நாள் கட்சியில் நீடித்து வந்தது. மற்றொரு புறம் எங்களுக்குதான் சீட் தரவேண்டும் என்ற மூத்த நிர்வாகிகளின் நெருக்கடிக்கும் அதிமுக தலைமை ஆளானது.

    கேபி முனுசாமி

    கேபி முனுசாமி

    இந்த லிஸ்ட்டில் தம்பிதுரை, கேபி முனுசாமி, சேலம் அஸ்தப்பட்டி பகுதிச் செயலாளர் சரவணன், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், கோகுல இந்திரா என்று பல பெயர்கள் அடிக்கடி அடிபட்டன. இவர்கள் அனைவருமே கட்சியின் சீனியர்கள்தான். யாருக்கு சீட் தந்தாலும் இன்னொருவரின் அதிருப்திக்கும் ஆளாக நேரிடும் என்பதையும் தலைமை நன்றாகவே உணர்ந்திருந்தது.

    விண்ணப்ப கடிதம்

    விண்ணப்ப கடிதம்

    இந்த சமயத்தில்தான், அன்வர்ராஜா, தமிழ்மகன் உசேன் போன்ற இஸ்லாமிய பிரதிநிதிகளின் பெயர்களும் அடிபட்டன. இவர்கள் தங்களுக்கு சீட் தர வேண்டும் என்று கட்சி தலைமைக்கே நேரடியாக விண்ணப்ப கடிதம் தந்திருந்தார்கள். முஸ்லிம் வேட்பாளருக்கு தந்தால், இஸ்லாமியர்களின் அதிருப்தியில் இருந்து மீளலாம் என்று தங்கள் கோரிக்கையாக தெரிவித்திருந்தனர். வலிமை மிக்க இந்த பாயிண்ட்டையும் அதிமுக நன்கு பரிசீலித்தே வந்தது.

    ராஜ்ய சபா சீட்

    ராஜ்ய சபா சீட்

    யாருக்கு தந்தாலும் பிரச்சனை வரும் என்பதாலும், சிறுபான்மையினருக்கு சீட் தருவதன் மூலம் தனது கை ஓங்கும் என்பதாலும் எடப்பாடியார் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் சொல்கிறார்கள். அதன்படி அதிமுக சார்பில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் தமிழ் மகன் உசேனுக்கு ராஜ்ய சபா சீட் தர ஓரளவு முடிவாகி உள்ளதாம்.

     பொதுவானவர்

    பொதுவானவர்

    தமிழ்மகன் உசேன், அந்த காலத்தில் இருந்து அதிமுகவில் இருப்பவர். ஜெயலலிதா இருந்தபோது இவருக்கு முக்கியத்துவம் தந்தவர். அது மட்டுமில்லை, ஓபிஎஸ், இபிஎஸ் என இரு தரப்பினரிடமும் சரிசமமான, நடுநிலையான போக்கை கடைப்பிடித்து வருபவர்.

    கோரிக்கை

    கோரிக்கை

    மேலும், 40 எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர்கள், இவருக்குதான் ராஜ்ய சபா சீட் தர வேண்டும் என்றுஏற்கனவே முதல்வரிடம் மனுவும் அளித்தனர். இந்த மனு அளித்தவர்களில் முக்கியமானவர்கள், தற்போது அதிமுக எம்எல்ஏக்களாக உள்ள தாமரை ராஜேந்திரன் (கொறடா), பன்னீர்செல்வம், தென்னரசு, நடராஜன் உள்ளிட்டோரும் அடக்கம் ஆவர்.

    விரைவில் அறிவிப்பு

    விரைவில் அறிவிப்பு

    எனவே, பொதுவான ஒரு நபரான தமிழ்மகன் உசேனுக்குதான் ராஜ்ய சபா சீட் உறுதி என்றும், அதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என்று பரபரக்கிறது அரசியல் வட்டாரம்!

    English summary
    It seems AIADMK likely to announce Senior Leader Tamil Magan Hussain as a Rajya Sabha member
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X